ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் இந்தியாவின் டாப் 5 மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்!

ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் இந்தியாவின் டாப் 5 மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்!

டாப் 5 மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்

இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்கு கீழ் விலை கொண்ட டாப் - 5 மைலேஜ் தரும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் மாடல் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

  • Share this:
காராக இருந்தாலும் சரி மோட்டார்சைக்கிள் என்றாலும் சரி, குறைந்த விலை, அதிக மைலேஜ், இதுவே புதிய வாகனங்கள் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ளும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும் இந்த அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் மாடல் கார்களில் அதிக மைலேஜ் கொண்டவற்றை டாப் 5 என வரிசைப்படுத்தியுள்ளோம்’

மாருதி சுசுகி பலேனோ:

மாருதி சுசுகி பலேனோ


நாட்டில் கிடைக்கும் கார்களிலேயே அதிக மைலேஜ் கொண்ட பெட்ரோல் காராக இருக்கிறது மாருதி சுசுகி பலேனோ. இதில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கும். இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் மேனுவல் வேரியண்ட் கார்கள் ரூ.5.90 லட்சம் என்ற விலையில் தொடங்கி ரூ.8.07 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையில்) என்ற விலை வரை கிடைக்கின்றன. இதில் மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் லிட்டருக்கு 23.87 கிமீ என்ற அளவில் உள்ளது.

பலேனோ கார்கள் 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சினுடன் வருகின்றன. இது அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவரையும், 113 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விலை : ₹ 5.90 Lakh - ₹ 8.07 Lakh
மைலேஜ் : 23.87 kmpl (ARAI)

டொயோட்டா கிளான்ஸா:

டொயோட்டா - மாருதி கூட்டு முயற்சியில் உருவான முதல் மாடல் இந்த கிளான்ஸா கார் தான். கிளான்ஸா கார்கள் பலேனோ மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பலேனோ போன்றே கிளான்ஸாவும் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. பலேனோவுக்கு இக்காருக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் கிடையாது. ஜி மற்றும் வி என இரண்டு வேரியண்ட்களில் இக்கார் கிடைக்கிறது.

டொயோட்டா கிளான்ஸா


இதன் ஜி வேரியண்டானது ஹைபிரிட் மோட்டாருடன் கூடிய 1.2 லிட்டர் K12N எஞ்சினுடன் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவரையும், 113 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. அதே போல இதன் வி வேரியண்டானது 1.2 லிட்டர் K12M எஞ்சினுடன் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவரையும், 113 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது.

கிளான்ஸா மாடலின் வி வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிமீரும், ஜி வேரியண்ட் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜும் தருவதாக ARAI-ஆல் சான்றழிக்கப்பட்டுள்ளது..

விலை: ₹ 7.18 - ₹ 7.90 Lakh
மைலேஜ்: 23.87 kmpl (ARAI)

மாருதி சுசுகி டிசையர்:

மாருதி சுசுகி நிறுவனத்தின் மேலும் ஒரு மைலேஜ் தரும் சிறந்த காராக இருக்கிறது டிசையர் சப் காம்பாக்ட் செடன் கார். இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை கடந்த ஆண்டு மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட k-Series இஞ்சின்களுடன் இக்கார் அறிமுகமாகியுள்ளது.

மாருதி சுசுகி டிசையர்


இதில் 4 சிலிண்டர்களுடன் கூடிய 1.2 லிட்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவரையும், 113 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. இதில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இக்கார் லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜ் தரும் என ARAI-ஆல் சான்றழிக்கப்பட்டுள்ளது.

விலை: ₹ 5.94 Lakh - ₹ 8.40 Lakh
மைலேஜ்: 23.26 kmpl (ARAI)

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

அடுத்து நம் லிஸ்டில் இருப்பது மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார். தற்போதைய தலைமுறை காரானது 2018ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மாருதியின் சிறந்த விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்


1.2-litre Dual Jet VVT எனப்படும் புதிய தலைமுறை எஞ்சின் இக்காரில் கொடுக்கப்பட்டுளது. இது அதிகபட்சமாக 88 பிஹெச்பி பவரையும், 113 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. இக்கார் லிட்டருக்கு 23.20 கிமீ மைலேஜ் தருவதாக ARAI-ஆல் சான்றழிக்கப்பட்டுள்ளது.

விலை: ₹ 5.73 Lakh - ₹ 7.91 Lakh
மைலேஜ்: 23.20 kmpl (ARAI)

மாருதி சுசுகி ஆல்டோ:

மாருதியின் ஆரம்ப மாடல் ஹேட்ச்பேக் காரான ஆல்டோ, குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட மக்களால் வாங்கும் தன்மையுடன் கூடிய ஒரு மாடலாக இருந்து வருகிறது. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ள நம்பகமான ஒரு காராக ஆல்டோ விளங்குகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ


இக்காரில் இடம்பெற்றுள்ள 3 சிலிண்டர்கள் கொண்ட 796cc எஞ்சின் அதிகபட்சமாக 47பிஹெச்பி பவரையும், 69 என்.எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. இக்கார் லிட்டருக்கு 22.05 கிமீ மைலேஜ் தருவதாக ARAI-ஆல் சான்றழிக்கப்பட்டுள்ளது.

விலை: ₹ 3 Lakh - ₹ 4.48 Lakh
மைலேஜ்: 22.05 kmpl
Published by:Arun
First published: