Home /News /automobile /

ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்ல கூடிய சில எலெக்ட்ரிக் டூ வீலர்களின் பட்டியல்...!

ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்ல கூடிய சில எலெக்ட்ரிக் டூ வீலர்களின் பட்டியல்...!

எலெக்ட்ரிக் டூ வீலர்

எலெக்ட்ரிக் டூ வீலர்

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மட்டுமின்றி, எரிபொருள் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
டீசல் மற்றும் பெட்ரோல் விலை இந்தியாவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ள நிலையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கினை தவிர்க்க மத்திய அரசு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியங்களை செயல்படுத்தி வருகின்றன.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மட்டுமின்றி, எரிபொருள் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது. இந்திய Electric Vehicle மார்க்கெட் பரந்த அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நிரம்பியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகன பிரிவு முக்கியமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் அதிகம் நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க இரு சக்கர வாகன நிறுவனங்கள் இந்த பிரிவில் சில மாடல்களை மட்டுமே வழங்கி வருகின்ற்னர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே பேட்டரியை சார்ஜ் செய்வதன் மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும். அதை வைத்து கொண்டு நீண்ட தூரம் செல்ல முடியாது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இந்த கருத்து உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு முறை சார்ஜ் செய்தாலே லாங் டிஸ்டன்ஸ் செல்ல கூடிய வகையில் இருக்கும் சில எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் குடித்து இங்கே பார்க்கலாம்.



பென்லிங் அவ்ரா (Benling Aura):

சீன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பென்லிங், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அவ்ரா. இந்த இரு சக்கர வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் Echo mode-ல் சுமார் 120 கிலோ மீட்டர் வரை செல்ல கூடியது. 2.5kW BLDC மோட்டாரை கொண்டுள்ள இந்த வாகனம், லித்தியம் அயன் பேட்டரி (lithium-ion battery) பேக்கிலிருந்து தனக்கான சக்தியை எடுத்து கொள்கிறது. மேட் ப்ளம் பர்ப்பிள், மேட் பிளாக் மற்றும் கிளாஸி ப்ளூ உள்ளிட்ட 3 கலர்களில் கிடைக்கிறது. இந்த வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.93,200.

Also read... இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு!



ஹீரோ எலெக்ட்ரிக் Nyx Hx (Hero Electric Nyx Hx):

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். அதிகபட்சம் 165 கிலோ மீட்டர் வரை செல்லலாம். கடந்த நவம்பர் 2020-ல் லான்ச் செய்யப்பட்ட இந்த இரு சக்கர வாகனம், டூயல் பேட்டரி செட்டப்பில் 51.2 V/30 Ah ஒருங்கிணைந்த வெளியீட்டில் (combined output) இயங்குகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.64,640 ஆகும்.



ஒடிஸி ஹாக் பிளஸ் (Odysse Hawk Plus):

ஒரு முறை சார்ஜ் செய்தால் 170 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல கூடிய திறன் கொண்ட, ஒடிஸி ஹாக் பிளஸ் EVs பிரிவில் விரும்பத்தக்க இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. வெறும் 4 மணி நேரத்தில் 0-விலிருந்து 100% வரை முழு சார்ஜ் ஆகும் திறனை கொண்டு ஈர்க்கிறது. இந்த வாகனத்தில் மொபைல் சார்ஜர் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி இருக்கிறது. இந்த வாகனம் 1.8 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்குகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ. இதன் எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சமாக இருக்கிறது.



ரிவோல்ட் ஆர்வி 300 (Revolt RV 300):

இந்த வாகனம் Eco Mode-ல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் வரை செல்ல கூடியது. இதில் 2.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய பேட்டரி பேக் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.10 லட்சத்திற்கு வாங்கலாம்.



ஒகினாவா ஐ-பிரைஸ் (Okinawa i-Praise):

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 139 கிலோ மீட்டர்கள் வரை செல்ல கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.09 லட்சம் ஆகும். இந்த வாகனம் 3.3 kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 2.5 kW அவுட்புட்டை உருவாக்கும் BLDC மோட்டாரை கொண்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி