Home /News /automobile /

இந்தியாவின் விலை மலிவான மற்றும் சிறந்த டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல்

இந்தியாவின் விலை மலிவான மற்றும் சிறந்த டாப் 5 ஸ்கூட்டர்களின் பட்டியல்

சிறந்த டாப் 5 ஸ்கூட்டர்களின்

சிறந்த டாப் 5 ஸ்கூட்டர்களின்

நீங்கள் மலிவான விலையில் ஒரு நல்ல ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா.! கீழே நீங்கள் காணப்போகும் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவின் முதல் 5 மலிவான ஸ்கூட்டர்களாகும்.

சவாரி அனுபவத்தை எளிமையாக்குவதால் சமீப காலங்களாக ஸ்கூட்டர்களின் தேவை நாட்டில் அதிகரித்து வருகிறது. கியர்களை கொண்ட பைக்குகளை விட ஸ்கூட்டர்களை எளிதாக ஓட்டி செல்லலாம் என்பதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் என பல்வேறு தரப்பினர் ஸ்கூட்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஸ்கூட்டர்களில் கொடுக்கப்படும் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஃப்ளோர் போர்டுகள் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல உதவும் என்பதாலும் பலர் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிக செலவின்றி ஸ்கூட்டர்களை வாங்க விரும்புவோர் என்ட்ரி லெவல் ஸ்கூட்டர்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் மலிவான விலையில் ஒரு நல்ல ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா.! கீழே நீங்கள் காணப்போகும் ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவின் முதல் 5 மலிவான ஸ்கூட்டர்களாகும்.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் (TVS Scooty Pep Plus):



இந்தியாவின் மலிவான ஸ்கூட்டரான ஸ்கூட்டி பெப் பிளஸ், மிக அடிப்படையான டிசைன் மற்றும் எளிய அனலாக் இன்ஸ்ட்ருமென்ட்டல் பேனலை கொண்டுள்ளது. இதன் குறைந்த எடை ஸ்கூட்டரை எளிதாக கையாள உதவுகிறது. அதிக எரிபொருள் செயல்திறனை பெற இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு உதவக்கூடும். ஸ்கூட்டி பெப் பிளஸ் 5bhp மற்றும் 6.5Nm ஆற்றலை வழங்கும் 87.8 cc எஞ்சின் கொண்டது. குறுகிய நகர்ப்புற சவாரிகளுக்கு மிகவும் பொருத்தமான ஸ்கூட்டராகும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.57,959 முதல் ரூ.60,859 வரை ஆக இருக்கிறது.

ஹீரோ பிளஷர் பிளஸ் (Hero Pleasure Plus):



உங்களுக்கு பேசிக் அல்லாத அதே சமயம் ஸ்டைலிஷான ஸ்கூட்டர் வேண்டுமென்றால் Hero Pleasure Plus-ற்கு செல்லலாம். இது ஒரு neo-retro டிசைனை கொண்டுள்ளது. இதன் என்ட்ரி லெவல் வேரியன்ட் ஒரு அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வரும் நேரத்தில் இதன் டாப்-எண்ட் X-tec வேரியன்ட் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ப்ளூடூத் கனெக்ஷன், SMS மற்றும் மிஸ்டு கால்ஸ் அலெர்ட்களை பெறுகிறது. இந்த ஸ்கூட்டர் 8bhp மற்றும் 9Nm பீக் டார்க்கை உருவாக்க 110cc எஞ்சினை பயன்படுத்துகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.61,900 முதல் ரூ.71,100 ஆகும்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 (TVS Scooty Zest 110):



இந்த ஸ்கூட்டரை Scooty Pep-ன் அதிக திறன் கொண்ட உடன்பிறப்பு என்று குறிப்பிடலாம். இந்த ஸ்கூட்டர் இது 8bhp மற்றும் 9Nm பீக் டார்க்கை வழங்கும் 109.7cc எஞ்சினை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பேசிக் டிஸைனுடன் வருகிறது, இருப்பினும் நிறுவனம் சில வைப்ரன்ட் கலர் ஆப்ஷன்களுடன் விஷயங்களை மேம்படுத்த முயற்சித்துள்ளது. LED DRL மற்றும் டியூப்லெஸ் டயர்களைத் தவிர இந்த ஸ்கூட்டரில் குறிப்பிடும்படி வேறு பெரிய அம்சங்கள் இல்லை. . இது லைட் வெயிட் ஸ்கூட்டர் என்பதால் புதிதாக டூவீலர் ஓட்ட துவங்கியுள்ளவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.64,641 - ரூ.66,318 வரை இருக்கும்.

ஹோண்டா டியோ (Honda Dio):



மலிவான விலை கொண்ட ஸ்கூட்டர்களின் பட்டியலில் உள்ள ஸ்போர்டிஸ்ட் ஸ்கூட்டர் இது. இதில் உள்ள எல்இடி ஹெட்லைட், எல்இடி பொசிஷன் லேம்ப் மற்றும் பாடி கிராபிக்ஸ் ஆகியவை இந்த செக்மென்ட்டில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து ஹோண்டா டியோவை தனித்து காட்டுகிறது. இது 9Nm பீக் டார்க்குடன் 8bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 110cc எஞ்சின் கொண்டுள்ளது.

இதன் ஸ்டாண்டர்ட்மாடல் ஒரு அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் யூனிட்டைப் பெறுகிறது, ஆனால் டாப்-எண்ட் ஒரு ஃபுல் டிஜிட்டல் கன்சோலைக் கொண்டுள்ளது. இதன் ஏசிஜி சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் த்ரீ-ஸ்டெப் எகோ இன்டிகேட்டர் அதிக எரிபொருள் செயல்திறனை பெற உதவும். இதன் எக்ஸ்ஷோ ரூம் விலை ரூ.65,075 - ரூ.68,473.

டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter):



இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 110 cc ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. இந்த ஸ்கூட்டரில் 7bhp மற்றும் 8Nm பீக் டார்க்கை உருவாக்கும் 110cc எஞ்சின் உள்ளது. Sheet metal wheel, standard, ZX, மற்றும் Classic ஆகிய 4 வேரியன்ட்களில் இது கிடைக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.66,273 - ரூ.76,543.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி