ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்.. பைக் வாங்க போகும் முன் இதை தெரிஞ்சுக்கங்க...

பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்.. பைக் வாங்க போகும் முன் இதை தெரிஞ்சுக்கங்க...

Budget Bikes

Budget Bikes

Fuel Efficiency Bikes: இந்தியாவில் அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் முதன்மையாக இருப்பது பஜாஜ் சிடி 100 ஆகும்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் தான் மிக அதிகப்படியாக விற்பனை ஆகின்றன. ஏனென்றால், இதுதான் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் விலை குறைவானதாக இருக்கிறது. மேலும், எந்தவொரு இடத்திற்கு சென்றுவரவும் பயனுள்ளதாக இருக்கிறது.

குறிப்பாக, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில், கிடைக்கும் சின்ன இடைவெளியைப் பயன்படுத்தி விரைவாகப் பயணிப்பதற்கு ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் ஆகியவையே பயனுள்ளதாக இருக்கின்றன. அதே சமயம், பெட்ரோல் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் சூழலில், நல்ல மைலேஜ் கொடுக்கக் கூடிய பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதுபோன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சில பைக்குகளை பட்டியலிட்டுள்ளோம்.

பஜாஜ் சிடி100

இந்தியாவில் அதிகப்படியான மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் முதன்மையாக இருப்பது பஜாஜ் சிடி 100 ஆகும். இது லிட்டருக்கு 75 கி.மீ. அளவுக்கு மைலேஜ் தருகிறது. இதில் சிங்கிள் சிலிண்டர் மற்றும் 4 ஸ்டிரோக் ஏர்-கூல்டு என்ஜின் இருக்கிறது. மார்க்கெட்டில் இருப்பதிலேயே மிக குறைவான விலையில் இது விற்பனையாகிறது. இதன் விலை ரூ.51,800 ஆகும்.

டிவிஎஸ் ஸ்போர்ட்

லிட்டருக்கு சுமார் 73 கி.மீ. அளவுக்கு மைலேஜ் தரும் இந்த பைக்குகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அத்துடன், 6 வகையான கலர்களில் இந்த பைக் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.58,900 ஆகும். இதிலும் சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்டிரோக் ஃபூயல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஏர் கூல்டு ஸ்பார்க் இக்னிஷன் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

பஜாஜ் சிடி 110

டிவிஎஸ் ஸ்போர் பைக்கின் விலையை ஒட்டியே இதன் விலையும் அமைந்துள்ளது. இதன் விலை ரூ.58,200 ஆகும். லிட்டருக்கு 70 கி.மீ. அளவில் மைலேஜ் தருகிறது. இதில் சிங்கிள் சிலிண்டர் மற்றும் 4 ஸ்டிரோக் ஏர்-கூல்டு என்ஜின் இருக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா 110

லிட்டருக்கு 70 கி.மீ. மைலேஜ் தரக் கூடிய பஜாஜ் பிளாட்டினா 110 இந்தப் பட்டியலில் 4ஆம் இடத்தில் இருக்கிறது. இதில் சிங்கிள் சிலிண்டர் மற்றும் 4 ஸ்டிரோக் ஏர்-கூல்டு என்ஜின் இருக்கிறது. இதன் விலை ரூ.63,300 ஆகும்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

இந்தப் பட்டியலில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து இடம்பெற்றுள்ள இரண்டாவது பைக் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆகும். இதுவும் பஜாஜ் பிளாட்டினா 110 பைக் போலவே தான் இருக்கிறது. ஆனால், இதன் விலை காரணமாக பட்டியலில் அதற்கு அடுத்த இடத்தில் வந்துள்ளது. இதன் விலை ரூ.70,000 ஆகும். லிட்டருக்கு 70 கி.மீ. மைலேஜ் தருகிறது. இதில் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Automobile, Bajaj Bike, Bike