• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஜனவரி 2021ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் இவைகள் தான்!

ஜனவரி 2021ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் இவைகள் தான்!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்த டாப்-10 விற்பனை லிஸ்ட்டில் பெரிய அளவில் எந்த காரின் விற்பனையும் சரிவை அடையவில்லை. இது கொரோனா வைரஸ் பரவலில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருவதை காட்டுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய ஆண்டு (2021) நாட்டின் வாகனத் துறைக்கு குட் நியூஸை கொண்டு வந்துள்ளது. நாட்டில், பயணிகள் வாகனங்களின் (The Indian passenger car) விற்பனையில் சுமார் 17.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரியில், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகியின் சிறந்த விற்பனையான காராக ஆல்டோ (Maruti Suzuki alto) உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் ஹூண்டாய் (Hyundai) கிரெட்டாவும் இந்த மாதத்தில் தனது மாஸை காட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல் வேறென்ன கார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையானது என்பதை கீழ்காணும் உள்ளடக்கத்தின் மூலம் தெரிந்து கொள்வோம். வழக்கம்போல் இந்தியாவில் கார்களின் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் 7 கார்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

மாருதி பிரெஸா: 

கடந்த ஜனவரியில் அதிகம் விற்பனையான கார்களின் முதல் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜனவரி மாதம், நிறுவனம் இந்த SUVயின் விற்பனையில் சிறிது அதிகரிப்பை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில், இது 10,623 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 4.82% அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10,134 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

மாருதி ஆல்டோ (Maruti Alto):  

மாருதி ஆல்டோ (Maruti Alto) இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் என்ற பெயரை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது. மாருதியின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் கார் கடந்த மாதத்தில் மொத்தம் 18,260 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும். என்ட்ரி லெவல் கார் வாங்க நினைத்தால் மாருதி ஆல்டோவை (Maruti Alto) வாங்கலாம். இந்த கார் பெட்ரோல் (Petrol) எஞ்சினுடன் சி.என்.ஜி (CNG) கிட்டிலும் கிடைக்கிறது. இது கடந்த இரண்டு தசாப்தங்களாக உள்நாட்டு சந்தையில் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மட்டுமல்ல, நாட்டின் அதிக விற்பனையான கார்களில் ஒன்றாகும்.

மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift)  

ஆல்டோவை தொடர்ந்து மாருதியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் (Maruti Swift) இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த லிஸ்ட்டில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை இந்த இரு மாருதி ஹேட்ச்பேக் கார்கள்தான் பிடித்துள்ளன. இருப்பினும் ஸ்விஃப்ட்டின் விற்பனை 2020 ஜனவரியை காட்டிலும் 14 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் 17,180 ஸ்விஃப்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020ல் இதே துவக்க மாதத்தில் 19,981 ஸ்விஃப்ட் கார்கள் (Maruti Swift) விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 

வேகன்ஆர் (Maruti WagonR)  

இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் 17,166 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கை உடன் மற்றுமொரு மாருதி தயாரிப்பாக வேகன்ஆர் (Maruti WagonR) உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள கார்களை போல் அல்லாமல் மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆரின் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அப்போது சற்று குறைவாக 15,232 வேகன்ஆர் கார்களே விற்கப்பட்டு இருந்தன. 

 மாருதி பலேனோ (Maruti Baleno):  

அடுத்த நான்காவது இடத்தில் மாருதியின் தயாரிப்புகளே இடம் பிடித்துள்ளன. இதில் மாருதி பலேனோ (Maruti Baleno) தான் 4வது இடத்தில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி பலேனோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முந்தைய மாடலைவிட இந்த புதிய பலேனோ காரில் ஏராளமான கூடுதல் அம்சங்களும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முகப்பு வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் பம்பருடன் விளக்குகள் அறை ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கிறது. 

 மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire):  

ஐந்தாவது இடத்தில் மாருதி சுஸுகி டிசையர் உள்ளது. இது நேர்த்தியான டிசைனை பெற்றுள்ளது. இதன் முன்புற தோற்றம் புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் முந்தைய வெர்ஷனோடு (ஸ்விஃப்ட் டிசையர்) ஒப்பிடுகையில், தற்போதைய மாடல் ஹேட்ச்பேக் போல் அல்லாமல், முறையான காம்பேக்ட் செடான் காரின் தோற்றத்தில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இதன் பின் பகுதியில் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 16,648 மற்றும் 15,125 ஆகும். இவை இரண்டின் விற்பனை 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.73 சதவீதம் மற்றும் 32.49 சதவீதம் குறைந்துள்ளது. 

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta):           

ஆறாவது இடத்தில் மாருதி அல்லாத காராக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) உள்ளது. தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் SUV கார் என்ற பெயரை பெற்றுள்ள க்ரெட்டாவின் புதிய தலைமுறை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 12,284 ஆகும். புதிய தலைமுறை அப்கிரேடினால் 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் க்ரெட்டாவின் விற்பனை சுமார் 78 சதவீதம் உயர்ந்துள்ளது. 2020 க்ரெட்டாவின் வருகையினால் மற்ற பிரபலமான SUV கார்களான ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 

ஹூண்டாய்வென்யூ (Hyundai Venue):         

ஹூண்டாய்வென்யூ (Hyundai Venue) இதற்கு அடுத்து 11,779 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. க்ரெட்டா மட்டுமின்றி வென்யூவின் (Hyundai Venue) விற்பனையும் 2020 ஜனவரியை காட்டிலும் 74.94 சதவீதம் அதிகரித்துள்ளது. BS4 வென்யூ டீசல் கார் லிட்டருக்கு 23.7 கி.மீ மைலேஜ் வழங்கி வந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள BS6 வென்யூ டீசல் கார் லிட்டருக்கு 23.3 கி.மீ மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் புதிய மாடல் 0.4 கி.மீ குறைந்த மைலேஜை வழங்குவது தெரியவந்தது. இதனாலும் பல கஸ்டமர்கள் இந்த காரை வாங்க ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். 

மாருதி ஈக்கோ (Maruti Eeco)  ஹூண்டாய் க்ராண்ட் i10 (Hyundai Grand i10 NIOS):

8வது மற்றும் 9வது இடங்களில் மாருதி ஈக்கோ (Maruti Eeco) மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்  (Hyundai Grand i10 NIOS) கார்கள் உள்ளன. மாருதி ஈக்கோவின் மைலேஜ் 15.37 KMPL க்கு 20.88 km ஐ தருகிறது. இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.11 KMPLக்கும், மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 20.88 KMPLக்கும் கிடைக்கிறது. ஹூண்டாய் தனது i10 ரகத்தின் மூன்றாம் தலைமுறைக் காராக புதிய க்ராண்ட் i10 நியோஸ் காரை களம் இறக்குகிறது. முந்தைய i10 கார்களைவிட மாற்றி வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட், LED DRLs என அசத்துகிறது. புதிய க்ராண்ட் i10 நியோஸ் சில்லவுட் வடிவமைப்பு வழக்கம்போல் ஹூண்டாய் தனித்துவத்துடன் ஹூண்டாய் வெர்னாவின் தோற்ற அமைப்பைக் கொண்டுள்ளது. 

Also read... விலை உயர்வுக்கு பிறகும் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வரும் மாருதி சுசுகி!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Vitara Brezza):          

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Vitara Brezza) 10,623 யூனிட் விற்பனையுடன் பத்தாவது இடத்தில்  உள்ளது. இந்தியாவின் காம்பேக்ட் SUV மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வகை கார்களில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா.  

இந்த டாப்-10 விற்பனை லிஸ்ட்டில் பெரிய அளவில் எந்த காரின் விற்பனையும் சரிவை அடையவில்லை. இது கொரோனா வைரஸ் பரவலில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருவதை காட்டுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: