Home /News /automobile /

மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களில் புதிதாக சேர்க்கப்படவுள்ள 10 சிறப்பு அம்சங்கள் இதோ!

மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களில் புதிதாக சேர்க்கப்படவுள்ள 10 சிறப்பு அம்சங்கள் இதோ!

மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்

மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்

இந்திய வாடிக்கையாளர்கள் இதை பெரிதும் விரும்புவதால் ரீ-இன்வென்டிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ப்ரீஸ்ஸா மாடலிலும் சன்ப்ரூஃப் வசதி வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்தியாவின் கார் சந்தையில் மாருதி சுசூக்கி விட்டாரா ப்ரீஸ்ஸா மாடல் கார்கள் மிகவும் பிரபலமானவை. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா மாடல் தற்போது ரீ-இன்வென்டிங் செய்யப்பட்டு புதுவித அம்சங்களுடன் வெளியாக உள்ளது. இதன் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்த ரீ-இன்வென்டிங் செய்யப்பட்ட ப்ரீஸ்ஸா மாடல் கார்கள் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் 10 சிறப்பம்சங்கள் பற்றி இனி பார்ப்போம்.

சன்ப்ரூஃப் : தற்போது புதிதாக அறிமுகம் ஆகி வரும் எல்லா மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களிலும் இந்த சன்ப்ரூஃப் வசதி தரப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் இதை பெரிதும் விரும்புவதால் ரீ-இன்வென்டிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் ப்ரீஸ்ஸா மாடலிலும் சன்ப்ரூஃப் வசதி வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இன்போடேயின்மெண்ட் சிஸ்டம் : 

சமீபத்தில் வெளியான மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா காரின் புகைப்படங்களை பார்க்கும்போது பெரிய அளவிலான டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடேயின்மெண்ட் சிஸ்டமுடன் வரலாம். தற்போது மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா ZXI மற்றும் ZXI பிளஸ் மாடல் கார்களில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடேயின்மெண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் இயங்குகிறது மற்றும் வாய்ஸ் கமெண்ட் சேவையையும் கொண்டது.

ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி : 

மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அப்டேட்களை கொண்ட புதிய இன்போடேயின்மெண்ட் ஸ்கிரீனை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் உங்களின் ஸ்மார்ட்போனை இணைத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.



இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் :  இந்த ப்ரீஸ்ஸா மாடலில் புதுவித இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியை ட்ரைவர் டிஸ்பிளேவில் தரலாம். அதுவும் பெரிய மாற்றத்துடன் இதை டிஜிட்டலாக முறையில் மாற்றியும் வழங்கலாம்.

ALSO READ |  குளிர்காலத்தில் உங்கள் கார்களை சரியான முறையில் பராமரிக்க டிப்ஸ்!

ஒயர்லெஸ் சார்ஜிங் :  தற்போது அப்டேட் ஆகி வருகின்ற பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த ப்ரீஸ்ஸா மாடலில் ஒயர்லெஸ் போன் சார்ஜிங் வசதியை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.



கனெக்டட் கார் டெக்னோலஜி :  தனது யூசர்கள் எளிமையான முறையில் எஞ்சினை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கு ஏற்ற வகையில் அட்வான்ஸ்டு கனெக்டட் கார் டெக்னோலஜியை மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களில் தரலாம். மேலும் கால நிலைக்கு ஏற்ற செயல்பாடுகளை மாற்றி கொள்ளும் வகையிலான ஹெட்லேம்ப்ஸும் இதனுடன் சேரும்.

360 டிகிரி கேமிரா காருக்கு வெளி புறத்தில் உள்ள எல்லாவற்றையும் எல்லா திசைகளில் இருந்தும் எளிதில் பார்க்கும் வகையில் 360 டிகிரி கேமிரா வசதி இந்த மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா மடலில் வழங்கப்படலாம் என்று கணிப்புகள் வருகின்றன.

ALSO READ |  ஒரே நாளில் 10,000 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் டெஸ்ட் ரைடு - டெலிவரி எப்போது?

பேடில் ஷிப்ட்டர்ஸ்  : இந்த புதிய மாருதி சுசூக்கி ப்ரீஸ்ஸா கார்களில் பேடில் ஷிப்ட்டர்ஸ் ஆட்டோமேட்டிக் வசதியுடன் வரலாம். இந்த சிறப்பம்சமானது SUV கியா சோனேட் கார்களில் மட்டுமே தற்போது உள்ளது. எனவே இதை ப்ரீஸ்ஸா மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

ஹைபிரிட் டெக்னோலஜி :  மாருதி சுசூக்கி நிறுவனமானது பழைய ப்ரீஸ்ஸா மடலில் இருந்த 12V மைல்டு ஹைபிரிட் டெக்னோலஜியை மாற்றி 48V ஹைபிரிட் டெக்னோலஜியை புதிய ப்ரீஸ்ஸா மாடலில் கொண்டு வரலாம். இதனால் காருக்கு அதிக மைல்லெஜ் கிடைக்கும். இந்த புதிய மாடலில் 4-சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரக்கூடும், இது 103bhp பவர் மற்றும் 138Nm டார்க்கை உற்பத்தி செய்யும். இது ஃபைவ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஃபோர் ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் வசதியுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car, Maruti Suzuki

அடுத்த செய்தி