உங்கள் பட்ஜெட் ரூ. 2 லட்சமா? இதோ டாப் 5 பைக்ஸ்...

news18
Updated: August 29, 2018, 2:07 PM IST
உங்கள் பட்ஜெட் ரூ. 2 லட்சமா? இதோ டாப் 5 பைக்ஸ்...
டி.வி.எஸ் அப்பாச்சே ஆர் ஆர் 310
news18
Updated: August 29, 2018, 2:07 PM IST
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்குகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. பைக் தரமாக இருந்தால் ரூ. 2 லட்சம் விலையுள்ள பைக்குகளை வாங்குவதற்கும் யாரும் தயங்குவதில்லை.

ஆனால் இதே ரகத்தில் பல பைக்குகள் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் நிலவுகிறது. இதனால் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்குகளில் சிறந்த 5 பைக்குகளை இங்கே பட்டியிலிடுகிறது நியூஸ் 18.

1.பஜாஜ் டாமினார்சாலையை வீடு போல் கருதி நிறைய நேரம் செலவழிப்பவரா நீங்கள்... உங்களுக்கு ஏற்ற பைக் இந்த டாமினார். எல்இடி ஹெட் லாம்ப், எல்இடி டைல் லைட், அலாய் வீல்கள், முன்னும் பின்னும் டிஸ்க் பிரேக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் என அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியது இந்த டாமினார். இதுமட்டுமல்லாமல் இதன் அசத்தலான ஹேண்ட்சம் லுக், கூடுதல் சிறப்பம்சத்தை தருகிறது. கேடிஎம் 390 பைக்கின் இன்ஜின் இந்த பைக்குக்கு பொறுத்தப்பட்டிருந்தாலும், இதனுடைய டிசைன் சொகுசாக பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

2. யமகா எஃப்சி 25

Loading...


யமகா எஃப்.சி 25 பைக் ஏற்கெனவே சாலைகளின் ராஜாவாக வளம் வந்த எஃப்சி 150 சிசி பைக்கின் மறுபிறப்பு. இந்த பட்டியலில் சிறந்த பட்ஜெட் பைக்கும் இதுவே. 249 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக் 20.3 பிஹெச்பி பவர் கொண்டது. முந்தைய எஃப்.சி பைக்கில் உள்ள சிறப்பம்சங்களான சிறந்த ஹேண்ட்லிங், மஸ்குலார் லுக் உள்ளிட்ட அனைத்தும் அப்படியே இந்த புதிய எஃப்.சி 25-ல் உள்ளன. ஹைவேக்களில் சொகுசான நீண்ட தூரப் பயணத்துக்கு சிறந்த பைக் இந்த எஃப்.சி 25.

3. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன்

2 லட்ச ரூபாய்க்குள் எந்த வண்டியும் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் கொடுக்கும் வசதிகளையும், பெர்ஃபாமென்ஸையும் கொடுத்துவிட முடியாது. அருமையான சேசிஸ், நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்ற சஸ்பென்ஸ்ஷன், பெரிய டையர்கள், கால்களை வசதியாக வைத்துக்கொள்ள நல்ல கட்டமைப்பு என அனைத்து வசதிகளும் ஹிமாலயனில் உண்டு. சிறிதும் யோசிக்காமல் வண்டியை ஆஃப் ரோட் ட்ரிப்புக்கு எடுத்துக்கொண்டு போகலாம்.

4. கேடிஎம் டியுக் 250

தினந்தோறும் பயன்படுத்துவதற்கும், பல விதமான சாலைகளில் ஓட்டுவதற்கும், ஹைவேயில் சீறிப் பாய்வதற்கும் ஏற்ற பைக் என்றால் அது கேடிஎம் 250 டியுக்தான். கேடிஎம் 200 டியுக்கிற்கும், 390 டியுக்கிற்கும் இடைப்பட்ட பட்ஜெட்டில் ஒரு அசத்தலான பைக் இந்த கேடிஎம் 250. அந்த இரு வண்டிகளின் சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்ட இந்த பைக் இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்காக உள்ளது. பெர்ஃபார்மன்ஸ் மீது தீராத காதல் கொண்டவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான பைக் இதுதான்.

5. டிவிஎஸ் அப்பாச்சே ஆர்ஆர் 310

2 லட்சத்திற்கு கொஞ்சம் அதிகம் விலையுடைய பைக் இது என்றாலும், இந்த பட்டியலில் இதனை சேர்க்கக் காரணம் இதனுடைய சிறப்பம்சங்கள்தான். அதற்காக கொஞ்சம் அதிகம் செலவு செய்தாலும் தவறில்லை. இந்த பைக்கின் இன்ஜினை வடிமைப்பதில் 35 வருட டிவிஎஸ்-ன் ரேசிங் வரலாறு பெரும் பங்கு வகித்துள்ளது என்பது பெர்ஃபாமன்ஸில் தெரிகிறது. இந்த பைக் ரேஸிங்க் செய்ய வடிமைக்கப்பட்டிருந்தாலும், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதால், 2 லட்சத்துக்கு கொஞ்சம் கூடுதல் விலை கொடுத்து தாரளமாக வாங்கலாம்.
First published: August 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...