ஊரெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், எப்படியும் மழைநீர் சூழ்ந்த பாதைகளில் பயணம் செய்வதில் இருந்து நாம் தப்பிவிட முடியாது. மழைநீரில் சென்றால் கார் பழுதுபடும் என்று எண்ணி, பைக், ஸ்கூட்டரிலும் செல்ல முடியாது. ஏனென்றால் மழை நேரத்தில் நனையாமலும், பாதுகாப்பாக செல்லவும் கார் பயணத்தில் கிடைக்கும் சௌகரியம் வேறெதிலும் கிடைக்காது.
அதே சமயம், பெருநகரங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள சாலைகளில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்கையில் நம்முடைய கார்கள் பழுது அடையும் வாய்ப்புகள் அதிகம். ஆக, இந்த மழைக்காலத்தில் நம்முடைய கார்களை பராமரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் காரை நிறுத்தியுள்ளபோது தண்ணீர் சூழ்ந்து விட்டால் முதலில் நாம் என்ஜின் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் வடிந்த பிறகு இக்னீஷன் சிஸ்டத்தை ஆன் செய்து வைக்க வேண்டும். ஒருவேளை பழுது ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மெக்கானிக் ஒருவரை அழைக்கவும். நீங்களே தொடர்ச்சியாக ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யும் பட்சத்தில் சிலிண்டர் வால், பிஸ்டன், கனெக்டிங் ராடு போன்றவற்றில் பழுது ஏற்படலாம்.
டயர்களை சரியாக பராமரிக்கவும்
மழை நேரத்தில் சாலைகளில் வழுக்கல், சறுக்கல் ஏற்பட்டு விபத்து நேரிடலாம். டயர்கள் நல்ல கண்டிஷனில் இருந்தால் மட்டுமே இந்த விபத்தை தவிர்க்க இயலும். ஆகவே, மழை நேரத்தில் டயர்களில் உள்ள பட்டன்களை சரிபார்க்கவும். அவை மிகவும் தேய்ந்து போய் இருந்தால் புதிய டயர்களை வாங்குவது நல்லது.
Read More: ஆட்டோ மொபைல் டீலர்களுக்கு அடித்த ஜாக்பாட்... நவராத்திரி பண்டிகை விற்பனை எவ்வளவு தெரியுமா?
பிரேக்குகளை செக் செய்யவும்
மற்ற பருவ காலங்களைக் காட்டிலும் மழை நேரத்தில் பிரேக்குகள் மிக சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் சறுக்கல் ஏற்படும் இந்த சமயத்தில் பிரேக் கனக்கச்சிதமாக பிடிக்க வேண்டும். ஆகவே, பிரேக் ஆயில், பிரேக் பேட், டிஸ்க் போன்றவற்றை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும்.
என்ஜின்களுக்கு முதல் கவனம்
லைட் மற்றும் இண்டிகேட்டர்களை செக் செய்யவும்
மழைக்காலங்களில் சாலைகளில் பகல் நேரத்திலேயே போதிய வெளிச்சம் இருக்காது. அத்தகைய தருணத்தில் லைட் எரியவிட்டபடி பயணிக்க வேண்டியிருக்கும். ஹேண்ட் சிக்னல்களைக் காட்டிலும் இண்டிகேட்டர்களை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், இவற்றுள் தண்ணீர் நிரம்பி வேலை செய்யாமல் போகலாம். அவற்றை உரிய முறையில் பராமரிக்கவும்.
வைபர்களை கவனிக்கவும்
மழை விழும் சமயத்திலும் நாம் பயணம் செய்ய மிக உதவிகரமாக இருப்பது இந்த வைபர்கள் தான். பல மாதங்களாக பயன்பாடு தேவையின்றி இருக்கும் இந்த வைபர்களை திடீரென்று பயன்படுத்தும்போது வேலை செய்யாமல் போகலாம். ஆகவே, இதனை சரிபார்க்கவும்.
Read More: புத்தாண்டுக்கு புது கார் வாங்க போறீங்களா - இதைப்படிங்க முதலில்!
இன்சூரன்ஸ் கட்டாயம்
என்னதான் பார்த்து, பார்த்து வண்டி ஓட்டினாலும், கவனமாக இருந்தாலும் மழைக் காலத்தில் எப்படியேனும் சின்ன, சின்ன விபத்துகள் ஏற்படலாம் அல்லது கார் பெரிய அளவுக்கு பழுது ஏற்படலாம். அத்தகைய சமயங்களில் இன்சூரன்ஸ் கிளைம் செய்து நாம் பழுது பார்த்துக் கொள்ளலாம். ஆகவே, இன்சூரன்ஸ் வேலிடிட்டி குறித்து சரிபார்த்துக் கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.