மழைக்காலங்களில் உங்கள் கார்களை பாதுகாக்க 4 முக்கிய டிப்ஸ்!

news18
Updated: July 22, 2018, 6:15 PM IST
மழைக்காலங்களில் உங்கள் கார்களை பாதுகாக்க 4 முக்கிய டிப்ஸ்!
கோப்புப் படம்
news18
Updated: July 22, 2018, 6:15 PM IST
மழைக்காலம் என்றாலே அனைவரது மனமும் குதூகலமாகிவிடும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இருப்பவர்களுக்கு இந்த மகிழ்ச்சி  சில நாட்கள்தான் நீடிக்கும். காரணம், நமது சாலைகள். மழை அதிகரிக்க, அதிகரிக்க சாலைகள் குண்டும், குழியுமாக மாறி நம் பயணங்களை பெரிதும் பாதிக்கும். மழைக்காலங்களில் விபத்துகள் நடப்பதற்கும் அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளதால், நமது வாகனங்களை மழைக்காலத்துக்கு ஏற்றவாறு தயார் செய்வது முக்கியமாகும்.

மழைக்காலத்தில் கார்களை பாதுகாத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களின் செக்லிஸ்டை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

டயர்களின் டிரெட்டை செக் செய்யவும்:
எந்த வாகனத்திற்கும் முக்கியமான பாகம் அதன் சக்கரங்கள்தான். சாலையையும் வண்டியையும் இணைக்கும் பாகம் அதுவே.  டயர்களில் வரி, வரியாக இருக்கும் அச்சுக்கு பெயரே ‘ட்ரெட்’. நாம் முக்கால்வாசி நேரம் தேய்ந்த டயர்களை வைத்தே வாகனங்களை  ஓட்டிக்கொண்டிருப்போம். இதற்கு ட்ரெட் தேய்ந்துபோதல் என்று பெயர். இது டயர்களுக்கும், சாலைக்கும் இடையே உள்ள ஃபிரிக்ஷனை குறைக்கும். இதனால் டயர்கள் சாலையில் பிடிப்பில்லாமல் வழுக்கிச்செல்லும்.

டயர் டிரட்கள்

மழைக்காலம் தொடங்குவதற்கு முன் டயர்களை செக் செய்து, ரீட்ரெட்டிங் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அதாவது டயர்களில் உள்ள அச்சை சரிசெய்வது, இல்லை என்றால் புது டயர்களை மாற்றிவிடுவது நல்லது.
Loading...
பாடி லீக்ஸை செக் செய்யவும்:
கார்களுக்கு கொடுக்கப்படும் அண்டர் பாடி கோட்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அண்டர் பாடி கோட்டிங் என்றால் காரின் அடிப்பகுதியில், வெளியில் தெரியும் பாகங்கள் துறு பிடிக்காமலும், லீக் ஆகாமலும் இருப்பதற்காக பெயின்ட் அல்லது ஆண்டி ரஸ்டிங் சொலுயுஷன் மூலம் கோட்டிங் கொடுப்பது. அண்டர் பாடி கோட்டிங் செய்வதன் மூலம் மழைக் காலங்களில் பாகங்கள் ரஸ்ட் ஆவதை தடுக்க முடியும்.

கார் அண்டர்பாடி கோட்டிங்
மேலும் கார் கதவுகளில் உள்ள ரப்பர்களை செக் செய்து கொள்வது மழைக்காலங்களில் தண்ணீர் காருக்குள் புகாமல் இருப்பது நல்லது.

பிரேக்குகளை செக் செய்யவும்:
மழைக்காலங்களில் மட்டுமில்லை, சாதாரண நாட்களிலும் பிரேக்குகளை நன்றாக வைத்திருப்பது முக்கியம். மழைக்காலங்களில் பிரேக்குகள் சரியாக வேலை செய்யாது. சாலைக்கும், டயர்களுக்கும் இடையே உள்ள ஃப்ரிக்ஷன் குறைபடுவதால் இவ்வாறு ஏற்படும். இதனால் உங்கள் பிரேக் ஷூ ஏற்கெனவே தேய்ந்து போயிருந்தால் அதை சரி செய்துகொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் பிரேக்  ஃபுலுயிடையும் செக் செய்ய வேண்டும்.


வைப்பர்:
இருட்டில் ஹெட் லைட் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு மழைக்காலங்களில் வைப்பர் முக்கியம். வைப்பர் இல்லையென்றால், மழைக்காலங்களில் காரின் வின்ஷீல்ட்கள் வழியாக ஒன்றுமே தெரியாது. வைப்பரின் முக்கிய பாகம் என்னவென்றால் ரப்பர் பிலேட்கள்தான். இது வெயில் காலங்களில் பாதிப்படைந்துவிடும். இதனால் மழைக்காலத்துக்கு முன் வைப்பர்களை செக் செய்து கொள்வது நல்லது.

வைப்பர் பிளேடுகள்
First published: July 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626