Home /News /automobile /

கார் இன்சூரன்ஸ் பீரியமத்தில் தள்ளுபடி வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான 4 டிப்ஸ்கள் இதோ!

கார் இன்சூரன்ஸ் பீரியமத்தில் தள்ளுபடி வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான 4 டிப்ஸ்கள் இதோ!

கார் தள்ளுபடி

கார் தள்ளுபடி

புதிய கார்களுக்கு என கிடைக்கக்கூடிய பல்வேறு  வகையான இன்சூரன்ஸ் திட்டங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கார் வாங்குவதை விட முக்கியமானது, அந்த காருக்கு இன்சூரன்ஸ் கட்டுவது. ஏனென்றால் எதிர்பாராத விபத்து நேரிடும் போது காருக்கு ஏற்படும் பெருஞ்சேதங்களால், உங்கள் பாக்கெட்டில் உள்ள பணம் கரைவதை இன்சூரன்ஸ் தடுக்கிறது.

முறையாக கார் இன்சூரன்ஸ் செலுத்தியிருந்தால், எதிர்பாராத சமயங்களில் காரால் ஏற்படும் செலவுகளை உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனம் பார்த்துக்கொள்ளும். நீங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன், உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை தான் தேர்வு செய்துள்ளீர்களா என்பதை ஒருமுறைக்கு, இரண்டு முறை பரிசோதித்து கொள்வது நல்லது.

புதிய கார்களுக்கு என கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது தேவைக்கு ஏற்ற சரியான பாலிசியை நீங்கள் தேர்வு செய்ய முடியும் மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தை தீர்மானிக்கும் காரணிகளையும் புரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் :  Mahindra : கார் வாங்க சரியான நேரம்... டாப் டக்கர் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்த மஹிந்திரா!

காப்பீட்டு பாலிசியை செல்லுபடியாக வைத்திருக்கவும், நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை குறைக்கவும் உதவும் சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் 1 - கார் காப்பீட்டு வகைகளைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுதல்:

உங்களுடைய புது காருக்கு என்று மார்க்கெட்டில் பல கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் கொட்டிக்கிடக்கின்றன. புதிய காருக்கான பாலிசியை மட்டுமின்றி அதன் உட்பிரிவுகளை நன்றாக ஆராய்ந்து, மிகவும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிப்ஸ் 2 - கார் இன்சூரன்ஸை சரியான நேரத்திற்கு புதுப்பித்தல்:

சரியான நேரத்திற்கு கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்க வேண்டும். காலாவதி தேதியை கடந்த பிறகு இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்தால், அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை அதிகரிப்பது போல் ஆகிவிடும். மேலும் பாலிசியை மீண்டும் பெறுவதற்கு பல நிபந்தனைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை அதன் காலாவதி தேதிக்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பது நல்லது.

இதையும் படியுங்கள் :  Punch, Nexon, Harrier போன்ற கார்களில் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ள Tata நிறுவனம் - விலை என்ன?

டிப்ஸ் 3 - சிறிய கிளைம்களை தவிருங்கள்:

ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பாலிசியை கிளைம் செய்யாமல் வைத்திருந்தால், அதற்காக தனியே ‘நோ க்ளைம் போனஸ்’ (NCB) கிடைக்கும். நீங்கள் உரிமைக்கோரப்படாத (க்ளைம்) ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை அதிகரிக்கிறது. மேலும் பீரியம் செலுத்த முடியாத நிலை வரும் போது, அதற்கு நீங்கள் போனஸ் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படியொரு ஜாக்பாட் இருப்பதால் காரில் ஏற்படும் சிறிய பழுது மற்றும் சேதங்களுக்கு ஆகும் செலவை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

டிப்ஸ் 4 - திருட்டு தடுப்பு சாதனங்கள்:

திருட்டு போன்ற சம்பவங்களால் கார் உரிமையாளர்களுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்டுவதற்கான இன்சூரஸ் பாலிசி தொகை மிகவும் அதிகமானது. எனவே தேவையான இன்சூரன்ஸ் பாலிசியை மட்டும் தேர்வு செய்துவிட்டு, காரில் திருட்டை தடுப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவது நல்லது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car

அடுத்த செய்தி