• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

காரின் மேல் விழுந்துள்ள அனைத்து கீறல்களுக்கும் பெயிண்ட் அடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • Share this:
மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நீரில் மூழ்கும் சாலைகள், மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உள்ளிட்டவை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடியவை. மழையில் வாகனம் ஓட்டுவது வேடிக்கையாக மற்றும் மகிழ்ச்சியாக இருந்தாலும், உங்கள் சொந்த வாகனங்களுக்கு அதனால் ஏற்படும் சவால்கள் அதிகம். கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலரது கார்கள் பல மாதங்களாக இயங்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது துவங்கியுள்ள பருவமழைக்கு உங்கள் கார் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் முக்கியமாக என்னவெல்லாம் கவனிக்க மற்றும் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

வைப்பர்ஸ் (Wipers):

பொதுவாக காரில் மிக குறைவாக பயன்படுத்தக்கூடிய ஒன்று வைப்பர்கள். ஊரடங்கு காரணமாக பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரில் முக்கியமாக நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஒன்று வைப்பர்கள் நன்றாக இயங்குகின்றனவா என்பதைதான். குறிப்பாக மழைக்காலங்களில் எதிரே வரும் வாகனங்கள் அவசியம் தெளிவாக தெரிய வேண்டும். இதற்காக மழைக்காலத்தில் உங்கள் காரின் வைப்பர் பிளேட்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வைப்பர்களை ஈரமான துணியால் துடைத்து, அவற்றில் ஒருபோதும் தூசி குடியேற அனுமதிக்காதீர். அதே போல விண்ட்ஷீல்ட் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூசுக்கள், ஆயில் மற்றும் குப்பைகள் காரணமாக கண்ணாடி பலவீனமாகும் என்பதால் கண்ணாடி மற்றும் வைப்பர் வாஷர் திரவத்தினை உரிய முறையில் பராமரிப்பது முக்கியம். உங்கள் காரின் விண்ட்ஷீல்ட் மீது வைப்பர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கவனித்து திருப்தியாக இல்லை என்றால் உடனடியாக அவற்றை மாற்றிவிடுங்கள்.

டயர்கள்:

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் கார்களை நன்றாக ஓட்ட டயர்களும் நன்றாக இருப்பது முக்கியம். ஆனால் மழைகாலங்களில் டயர்கள் நல்ல கண்டிஷனில் இருப்பது மிக மிக முக்கியம். டயரின் தேய்மானத்தை பார்த்து தேவைப்படின் டயர்களை மழைகாலத்திற்கு முன்பே மாற்றி விடுவது நல்லது. ஏனென்றால் வறண்ட நிலையில் நன்றாக வேலை செய்யும் டயர்கள் ஈரமான சாலைகளில் சரியாக வேலை செய்யாமல் போகலாம். டயர்களின் ட்ரீட்ஸ் (Treads) குறைந்தது 3-4 மி.மீ. ஆழத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மழை நேரங்களில் காரில் செல்லும் போது Treads டயரின் கீழ் தண்ணீர் சேருவதைத் தடுக்கிறது மற்றும் கிரிப்பை தக்க வைக்க உதவுகிறது. டயர் ரப்பருக்கும் கீழேயுள்ள சாலைக்கும் இடையில் ஒரு முக்கிய தொடர்பு தொகுப்பை பராமரிக்கிறது. எனவே சரியான பள்ளங்கள் இன்றி தேய்ந்து போய் காணப்படும் டயர்கள் அவசரகால பிரேக்கிங் சூழ்நிலைகளில் அல்லது ஷார்ப்பான திருப்பங்களில் கார் நிறுத்தப்படாமல் அல்லது எளிதில் டர்ன் ஆகாமல் போகக் கூடிய நிலைக்கு காரணமாகிறது. எனவே டயர்களை பரிசோதித்து அதிக தேய்மானம் காணப்பட்டால் மழைக்காலத்திற்குள் விரைவாக மாற்றி விடுங்கள்.

Must Read | நவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா

பிரேக்குகள்:

பிரேக்குகளின் முக்கியத்துவம் பற்றி நாங்கள் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. அவசரகால சூழ்நிலைகளில் பிரேக்குகள் நல்ல கண்டிஷனில் இருப்பது மிக அவசியம். பிரேக்குகள் உங்கள் கார் டயர்களின் தரத்துடன் கைகோர்த்து செயல்படும் ஒன்று. மேலும் பிரேக் பேட்களைப் போலவே காரின் டயர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எனவே பிரேக்குகளை சரிபார்த்து தேவை ஏற்பட்டால் அதை ரிப்பேர் செய்தோ அல்லது மாற்றியோ வைத்துக்கொள்ளுங்கள்.

எலக்ட்ரிக்கல்ஸ்:

பல வாரங்களாக பயன்படுத்தாமல் கார்கள் இருக்கும் நிலையில் எல்லாவற்றையும் போல் காரில் இருக்கும் எலக்ட்ரிக்கல்ஸ் முறையாக வொர்க் ஆகிறதா என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். லைட்ஸ், பிளிங்கர்ஸ், ஃபாக் லைட்ஸ், ஹெட் லேம்ப்ஸ் உள்ளிட்டவற்றை சரிபார்த்து கொள்ளுங்கள். மழைக் காலத்தில் லைட்ஸ் மற்றும் வைப்பர்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் கார் பேட்டரியின் நிலையையும் மறக்காமல் சரி பார்க்கவும்.

மேற்பராமரிப்பு:

நீர் உலோகத்தை துருப்பிடிக்கச் செய்கிறது. எனவே காரின் மேல் விழுந்துள்ள அனைத்து கீறல்களுக்கும் பெயிண்ட் அடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காரின் அடிப்பகுதியில் நீங்கள் anti-rust treatment மேற்கொள்ளலாம். மழைநீர் புகும் தாழ்வான இடத்தில் வசிப்பவர்கள் என்றால் அண்டர்பாடி ரப்பர் கோட்டிங் செய்யலாம். கார் டோர்களில் இருக்கும் ரப்பர் லைனிங் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவைப்படும் அனைத்து பகுதியிலும் கிரீஸ் அப்பளை செய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: