மும்பையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான Tiivra தனது முதல் காம்போசைட் ஃபைபர் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வெறும் 1,250 கிராம் எடை மட்டுமே கொண்டவை.
இதன் காரணமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்கள் உலகிலேயே மிகவும் லைட் வெயிட் கொண்ட ஹெல்மெட்ஸ் என்ற பெருமையை பெற்றுள்ளன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய லைட்டஸ்ட் ஹெல்மெட்டின் விலை வரி உட்பட ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெல்மெட்டை மும்பையில் Nykaa நிறுவனர் ஃபால்குனி நாயர் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த ஹெல்மெட்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், குறைந்த எடை கொண்டிருந்தாலும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக Tiivra கூறி இருக்கிறது. இந்த ஹெல்மெட்கள் அக்ரசிவான போஸ்ச்சர்களில் (aggressive posture) ரைடிங் செய்ய விரும்புவோருக்கு ஏரோடைனமிகல் முறையில் உகந்ததாக இருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த ஹெல்மெட் மோட்டார் சைக்கிள்களை அதிகம் விரும்பி ஓட்டும் பல மக்களிடம் கேட்டு சேகரிக்கப்பட்ட விரிவான கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹெல்மெட்டிற்கு DOT மற்றும் ISI உள்ளிட்ட தரச் சான்றிதழ்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் Tiivra நிறுவனம், உலகின் மிகக் கடுமையான தரச் சோதனைகளில் ஒன்றான ECE 20.6 சான்றிதழுக்காக காத்திருக்கிறது. இதனிடையே ஹெல்மெட் வெளியீட்டு விழாவில் பேசிய Tiivra-வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அல்பனா பரிடா, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் 200-650சிசி வகையிலான பல புதிய மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன. எனவே உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளுக்கு இந்தியா சரியான சந்தையாக உள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த இரு சக்கர வாகன ஹெல்மெட் தொழிற்சாலைகள் இருக்குமிடமாகவும் இந்தியா இருக்கிறது.
Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.?
எனவே நாங்கள் வெறுமனே ஹெல்மெட்களை மட்டுமே விற்க களம் இறங்கவில்லை. மாறாக பைக் ரைடருடன் உணர்வுபூர்வமான ஒரு உறவைக் கொண்ட வலுவான பிராண்டை உருவாக்க நினைத்தோம். எனவே உலகத் தரம் வாய்ந்த ஒரு தயாரிப்பை உருவாக்க நாங்கள் சுமார் 2 வருடங்கள் எடுத்து கொண்டோம் என்றார். Tiivra-வின் லைட்டஸ்ட் ஹெல்மெட்டுகள் ஷாக் அப்ஸார்ப்ஷனில் உயர் தரத்தைக் கொண்டுள்ளன, மேலும் அவை தெருக்களிலும் சாலைகளிலும் அதிக விசிபிலிட்டியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Also Read : இளைஞர்களை கவரும் ராயல் என்பீல்ட்! வழக்கத்துக்கு மாறாக சிறிய பைக்குகள் அறிமுகம்..
எனவே குறைந்த வெளிச்சத்தில் கூட ஹெல்மெட்டை அணிந்து கொண்டு ரைடிங் செல்லும் பைக்கருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஹெல்மெட்கள் StarBlaze பூசப்பட்ட ஒரு ஸ்பாய்லரை கொண்டுள்ளன, இது நிப்பான் பெயிண்ட்ஸால் தயாரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட கோல்டு கோட்டிங் ஆகும். இவை நைட்-டைம் விசிபிலிட்டிக்காக ரிஃப்லெக்டிவ் நானோ-பார்டிகிள்ஸ் மற்றும் ஹை விசிபிலிட்டிக்கான பேஸ் கோட்டாக சன்பிளேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன. இந்த கலெக்ஷன் Alter Ego என்று அழைக்கப்படுகிறது மற்றும் ரைடர் ஆர்க்கிடைப்களின் அடிப்படையில் Xroads, Sabre, Razztazz, T1, Buzzy மற்றும் Demon. உள்ளிட்ட ஆறு டிசைன்களை கொண்டுள்ளது மற்றும் S, M, L மற்றும் XL உள்ளிட்ட 4 சைஸ்களில் வெளிவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Helmets