• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புது லுக்கில் ராயல்என்பீல்டு 650 கான்டினென்டல் - விலை எவ்வளவு தெரியுமா?

புது லுக்கில் ராயல்என்பீல்டு 650 கான்டினென்டல் - விலை எவ்வளவு தெரியுமா?

ராயல்என்பீல்டு 650 கான்டினென்டல்

ராயல்என்பீல்டு 650 கான்டினென்டல்

ஹேண்டில்பாரில் எல்.இ.டி டர்ன் இண்டிக்கேட்டர், பக்கவாட்டு கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ராயல் என்பீல்டு நிறுவனம் பிளாக்ஷிப் மோட்டார் சைக்கிள்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்களின் 2021 வெர்ஷன் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்டர்செப்டரின் தொடக்க விலை ரூ.2.75 லட்சம், கஸ்டம் பெயிண்ட் வெர்ஷன் விலை 2.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. டாப் என்ட் கிரோம் பெயிண்ட் விலை 2.97 லட்சம் என எக்ஸ் ஷோரூம் விலையில், அறிமுகம் செய்யப்பட்டன.

என்பீல்டு ரக பைக்குகளுக்கு இந்திய மார்க்கெட்டில் எப்போதும் வரவேற்பு இருப்பது போலவே, இந்த பைக்குகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஹிமாலயன் உள்ளிட்ட மற்ற வகை பைக்குகளின் விற்பனை சரிவுப் பாதைக்கு சென்றபோதும் இந்த பைக்குளின் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. ஹை லுக், பேன்டஸி என கிளாசிக் அனுபவத்தை கொடுக்கும் என வாடிக்கையாளர்கள் நம்பினர். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை.

இப்போது, சென்னையைச் சேர்ந்த ரெனோவாடிவ் மோட்டார்வொர்க்ஸ் பைக் மாடிபிக்கேஷன் நிறுவனம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி மாடல்களில் மாடிபிக்கேஷன் செய்து டிவிட்டரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடிபிக்கேஷன் பைக்குகள் அட்டகாசமான மற்றும் கம்பீரமான லுக்கை கொடுக்கின்றன. ஓல்டு லேடி என இந்த புதிய மாடிபிகேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் இருக்கும் பைக்குகளுடன் பார்க்கும்போது, ஸ்டாக் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருப்பவையாக உள்ளது. சிவப்பு, கருப்பு மற்றும் தங்க நிற ஷேட் கலர்கள் புதிய மாடிபிகேஷன் பைக்குகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் வகையில் வண்ணங்கள், டார்க்காக சேர்க்கப்பட்டுள்ளது. பைக் ரைடிங் செய்பவர்களுக்கு சூப்பரான அனுபவத்தை கொடுக்கும். புதிய மாடிபிகேஷனை பார்க்கும்போதே, ரைடிங் பிரியர்களின் கனவு பைக்காக மாறவும் வாய்ப்புள்ளது என ரெனோவேடிவ் மாடிபிகேஷன் நிறுவனம் கூறியுள்ளது.

Also read... நாடு முழுவதும் 10,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க Massive Mobility-யுடன் பாட்னர்ஷிப் வைத்த ஹீரோ எலெக்ட்ரிக்!

ஹேண்டில்பாரில் எல்.இ.டி டர்ன் இண்டிக்கேட்டர், பக்கவாட்டு கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சீட் பொறுத்தவரை ஒருவர் அமரும் வகையில் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசியதுபோல் பிரேக் மற்றும் சக்கர கம்பிகளில் வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், என்ஜினில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. பவர்டிரெய்ன் 648 சிசி, இரண்டு சிலிண்டர், 52 என்.எம் முறுக்குத் திறனில் 47 பி.எச்.பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், அதன் மார்க்கெட் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் வெளியேறியதால், அந்த நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளான ஹிமாலயன் உள்ளிட்டவைகளின் விற்பனை பாதித்தது. இருப்பினும், இன்டர்செப்டர், கான்டினென்டல் ஆகிய பிராண்டுகளின் விற்பனை பாதிக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் மாடிபிகேஷனும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பவையாக இருப்பதால், வரும் காலங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: