மாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மாடலின் லுக் முற்றிலுமாக மாற்றப்பட்டு, மாஸாக இருக்கிறது.

  • Share this:
இந்தியா மற்றும் உலகளவில் மிகப்பெரிய மற்றும் பாரம்பரிய மோட்டார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றார்போலவும் பைக்குகளை வடிவமைத்து வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட அல்லது ராயல் என்ஃபீல்டு பிறகு தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பல இப்போது மார்க்கெட்டில் இல்லாத நிலையில், இன்றளவும் பைக் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கம்பீரமாக இருந்து வருகிறது. தரமான மற்றும் நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடிய வகையில் ராயல் என்ஃபீல்டு பைக்குள் இருப்பதால், மற்ற நிறுவன பைக்குகளை காட்டிலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பிரத்யேகமான இடத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளன.

இப்போதும் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக தேர்தெடுக்கும் பைக்குகளாக இருக்கும் ராயல் என்ஃபீல்டில், ரேசர் பைக்குகளான கான்டினென்டல் ஜிடி 650 மாடல் முற்றிலுமாக மறுவடிமைப்பு செய்யப்பட்டுள்ளது. கஃபே ரேசர் பைக்குகள் என கூறப்படும் இவை சாய் ரேசர்களாக உருவாக்கப்பட்டுள்ளன. சாய் ரேசர் பைக்கின் புதிய வடிவமைப்பு யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கோவாவில் இருக்கும் ஜூகாட் வொர்க் ஷாப்பில் இருக்கும் பிரபல வாகன மறுவடிவமைப்பாளரான பால் ஸ்மித், கஃபே ரேசரை சாய் ரேசராக உருமாற்றியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் மறுவடிவமைப்பு செய்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சாய் ரேசரில் எந்தவித வண்ணமும் கிடையாது. மெட்டல் கலரில் இருக்கும் அந்த பைக்கில், அவை பாலிஷ் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்த புதுமையான பாலிஷ் மெட்டல் லுக், சாய் பைக்குக்கு பிரத்யேகமாக லுக்கை கொடுக்கிறது. ஸ்டாக் ஹெட்லேம்ப் யூனிட்டுகள் ஸ்போர்ஸ்ட் டைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாக் ஹெட்லேம்பில் ஹெட்லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கும் வித்தியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சாய் ரேசர் சிங்கிள் சீட்டராக உள்ளது.

Also read... இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையம் – பொது மக்களுக்காக நவி மும்பையில் திறப்பு!

ரேசர்களிடையே இந்த பைக் பிரத்யேகமாக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேசர்களுக்கு கம்பீரம் குறையாமல் மாஸ் லுக்கை கொடுக்கும். முன் பக்க வீல் ஸ்போக்ஸூடன் ரெட்ரோ லுக்கை கொடுக்கிறது. டையர்கள் இரண்டுக்கும் ஸ்டாக் வெர்சனில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மோனோ ஷாக் சஸ்பென்ஸ்சன் உள்ளது. பின்பக்க லைட் எல்.இ.டி பார்மேட் மற்றும் ஷார்ப் லுக்கில் உள்ளது.

கஸ்டம் பைக்குகளில் இருக்கும் ஸ்டாக் எக்ஷாஸ்ட் பைப் மாற்றப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 650 சிசி மற்றும் ஏர்கூல்டு அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 45 பி.எச்.பி பவுன், 52 என்.எம் பீக் டர்கியூவையும் கொடுக்க வல்லது. மாற்றியமைக்கப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650 ரேசர்களுக்கு வரப்பிரசாதமாகவும், சிங்கிளாக லாங் டிரைவ் செல்பவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: