• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் Interceptor 650 Scrambler வாகனம்!

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் Interceptor 650 Scrambler வாகனம்!

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட்

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட்

ஒட்டுமொத்தமாக, பைக் ஆர்வலர்களின் முதல் விருப்பமாக இந்த வாகனம் இருக்கும். அது நிச்சயமாக சாலையில் ஓட்ட உகந்ததாகவும், ஓட்டுனருக்கு சிறந்த அனுபவத்தையும் கொடுக்கும்.

  • Share this:
ராயல் என்பீல்டு மோட்டார் வாகனங்களின் புகழ் மற்றும் ரசிகர்களின் பின்தொடர்தல் இந்திய சந்தையில் மட்டுமல்ல, அதன் நவீன பொறியியல் மற்றும் அம்சங்களுடன் சேர்ந்த கிளாசிக் ரெட்ரோ டச்சின் இணைவு உலகளாவிய சந்தையிலும் சூப்பர் ஹிட் வாகனம் என்ற பெயரை பெற்றுள்ளது. வாகன ஆர்வலர்கள் மற்ற பைக்குகளை விட RE பைக்குகளை பெரும்பாலும் விரும்புவதற்கு அதன் அசல் வடிவமைப்புகள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், பல இண்டிபெண்டன்ட் மாடிஃபையர்ஸ் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் மாற்றங்களுடன் பைக்குகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்பதும் ஒரு காரணம்.

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பைக்குகள் பல புதுப்பித்தல்களுடன் வாகன சந்தையை கலக்கி வருகின்றன. அந்த வகையில் முடிவில்லாத மாற்றியமைக்கப்பட்ட RE பைக்குகளின் சமீபத்திய சேர்க்கை தான் ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 ஸ்க்ராம்ப்ளர் ஆகும். இது அர்ஜென்டினாவை அடிப்படையாகக் கொண்ட கஸ்டம் ஹவுஸ் STG டிராக்கரால் மறு வடிவமைப்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளரால் ஈர்க்கப்பட்ட STG டிராக்கர், ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 மாடலை புதுப்பித்துள்ளது. இதன் எஞ்சின், ஃபியூயல் டேங்க் மற்றும் சேஸ் போன்ற அடிப்படை விஷயங்களைத் தவிர, மாடிஃபையர்கள் பைக்கில் உள்ள அனைத்தையும் மாற்றியுள்ளனர். பெரிய டயர்கள் முதல் புதிய டான் சீட் கவர் வரை, இந்த ஸ்க்ராம்ப்ளரில் உள்ள அனைத்தும் புத்துணர்ச்சியுடன் புதிதான தோற்றத்தை பெற்றுள்ளது.

இதுதவிர பைக்கின் முன்புறம் ஹெட்லைட் ப்ரொடெக்டர் கிரில், கஸ்டம் ரெய்ஸ்டு ஃபெண்டர் மற்றும் எஞ்சினுக்கு ஒரு புதிய பேஷ் பிளேட் ப்ரொடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் கைப்பிடிகள் ஒரு ஸ்டைலான ப்ரொடெக்டரை கொண்டுள்ளன. இந்த மாற்றியமைக்கப்பட்ட இன்டர்செப்டர், அதன் புதிய உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் நொபி டயர்கள் காரணமாக அசல் பைக்கை விட சற்று உயரமாக இருக்கும். புதிய டயர் அமைப்பு பைக்கிற்கு அதிகப்படியான உணர்வை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பின்புற இடது பக்கத்தில், ஒரு கேலனில் கூடுதல் எரிபொருளை வைக்க இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also read... மகேந்திரா முதல் சஃபாரி வரை - ரூ.20 லட்சத்துக்கும் குறைவான TOP 7 சீட்டர் எஸ்.யூ.வி கார்கள்!

ஒட்டுமொத்தமாக, பைக் ஆர்வலர்களின் முதல் விருப்பமாக இந்த வாகனம் இருக்கும். அது நிச்சயமாக சாலையில் ஓட்ட உகந்ததாகவும், ஓட்டுனருக்கு சிறந்த அனுபவத்தையும் கொடுக்கும். மேலும் பைக் எஞ்சினில் அதே 648 சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேர்லல் டூயல் மோட்டார்கள் உள்ளன. இது 48 பிஎஸ் பவர் ஜோடிகளை 52 என்எம் பீக் டார்க்கில் உருவாக்க முடியும். எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்டாக் ஸ்லிப்பர் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 வாகனம் ரூ.2.91 லட்சம் முதல் ரூ.3.13 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் விற்பனையாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: