• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கஸ்டம் ராப் மற்றும் பாடி கிட்டுடன் புதிய தோற்றத்தில் விற்பனைக்கு வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

கஸ்டம் ராப் மற்றும் பாடி கிட்டுடன் புதிய தோற்றத்தில் விற்பனைக்கு வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

சிறந்த செயல்திறன், போதுமான பயணிகள் இருக்கை வசதி மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட கட்டாய அம்சங்களுடன் இந்தியா சந்தையில் வலம் வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தற்போது மாற்றியமைக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் பாடி ராப், சுசுகி ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட்ஸ் பாடி கிட் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை பெறுகிறது. தற்போது இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் வாகன பிரியர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். மேலும் சிறந்த செயல்திறன், போதுமான பயணிகள் இருக்கை வசதி மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட கட்டாய அம்சங்களுடன் இந்தியா சந்தையில் வலம் வருகிறது.

பல கார் ஆர்வலர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் வாகனங்களை மாற்ற விரும்புகிறார்கள். எனவே ஒவ்வொரு முறையும் இந்திய சாலைகளில் ஒரு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்விஃப்டைக் பார்ப்பது வழக்கமானதாகி விட்டது. அந்த வகையில் தற்போது ஜெல்லி பீன் என்று குறிப்பிடப்படும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டின் மாறுபட்ட தோற்றம் குறித்து பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

இந்த வாகனம் மைண்ட் ஆட்டோ மோட்ஸால் இயக்கப்படுவதோடு ஒரு ஸ்போர்ட்டி பாடி கிட், கஸ்டமைஸ் பாடி ராப் மற்றும் வேறு சில மாற்றங்களுடன் வருகிறது. கருப்பு நிறத்தில் கஸ்டம் ராப் செய்யப்பட்ட இந்த வாகனம் பிரபல அனிமேட்டட் சீரிஸான Naruto-வால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராப்பின் விலை மட்டும் ரூ.9,500 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பக்கத்தில், இந்த வாகனம் ஒரு ஸ்டாக் கிரில்லை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வாகனத்தின் பம்பர் சுசுகி ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட்ஸ் கிட்டால் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல பிளாக்டு-அவுட் மெஷ் கிரில் ஒரு சுசுகி லோகோவையும் கொண்டுள்ளது.

இதுதவிர இந்த காரின் பக்கவாட்டில், 15 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. இதற்கு ரூ.26,000 செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ரப்பர் டயர்கள் ரூ.3,000 மதிப்புள்ள ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பின்புறப் பிரிவில் எல்.ஈ.டி டெயில்-விளக்குகள் ரூ.12,500 செலவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஃபாக்ஸ் டிஃப்பியூசர் மற்றும் டூயல் எக்சாஸ்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Also read... மகிந்திரா தார்-க்கு சவாலாக மாருதி சுசுகி ஜிம்னி - லீக்கான தகவல்!

இது குறித்து Gaadiwaadi.com-ல் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய மாற்றங்களின் அடிப்படையில் வாகனத்தின் ஹெட்லைட்கள் புதிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களையும் பெறுகின்றன. கருப்பு நிறத்தில் பூசப்பட்ட ரூப் இன்ஸ்டால் ஸ்பாய்லரையும் இந்த கார் பெறுகிறது. இதற்கு ரூ.6,500 செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மற்றும் பேட்ஜ்கள் டெயில்கேட்டிலிருந்து அகற்றப்பட்டு, காருக்கு ஒழுங்கற்ற தோற்றத்தை அளிக்கிறது.

விண்ட்ஸ்கிரீன்கள் மற்றும் ஜன்னல்கள் மிகவும் டார்க் ஷடோவைப் பெறுகின்றன. டார்க்கான கார் ஜன்னல்களை வைத்திருப்பது இந்தியாவில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புதிய மாற்றங்களுடன் ஸ்விஃப்ட் ஒரு அசத்தலான வடிவமைப்பை பெற்றிருப்பதோடு, வாகன ஆர்வலர்களை ஈர்க்கத் தவறவில்லை என்று தான் குறிப்பிட வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: