இந்தியாவில் முன்னணி கார் விற்பனை நிறுவனமான மஹிந்திராவுக்கு தற்போது வந்துள்ள எஸ்யூவி ஆர்டர்களை டெலிவரி கொடுக்க முடியாத அளவிற்கு சப்ளை செயின் சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்திய வாகன உற்பத்தியாளர் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்திய ஏழு இருக்கைகள் கொண்ட XUV700 முன்கூட்டியே 70 ஆயிரம் யூனிட்கள் வரை ஆர்டர்களை பெற்றுள்ளது. அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் இந்த காரை அதிகம் விரும்புவதால், இந்தியாவிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக மஹிந்திரா XUV 700 கார் மாறியுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் “கடந்த ஆண்டு கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட சிப் பற்றாக்குறை தற்போது சரி செய்யப்பட்டுள்ள போதும், இன்னும் மூலப்பொருள் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் அந்த காரை பெறவேண்டுமென்றால் 2 வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட 15.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மஹிந்திரா நிறுவனம், கடந்த திங்கட்கிழமை ஸ்கார்பியோ - என் காரை பிக் டாடி ஆஃப் எஸ்யூவிகள்" என்று அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலையும் 11.99 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்கி 19.49 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை உள்ளது. ஏற்கனவே மஹிந்திரா கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், இந்த காரில் வெறும் 25 யூனிட்களை மட்டுமே ஆர்டராக பெற அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல் தீவிர மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கவில்லை. அதற்கு பதிலாக பயணிகள் பயன்படுத்தக்கூடிய e-Verito என்ற எலெக்ட்ரிக் காரை மட்டும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் வசதி இல்லாத காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தயாரிப்பு குறித்து களமிறங்குவது பற்றி மஹிந்திரா நிறுவனம் முடிவெடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
Also Read : ஆல்டோ, வேகன் ஆர் கார்களின் உற்பத்தியை நிறுத்த மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு!
ஆனால் 2027ம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அப்போதைய காலக் கட்டத்தில் மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனத்தின் விற்பனை 20 முதல் 25 வரை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : தமிழகத்தில் புதிதாக 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள்.. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!
வாகன வணிக நுண்ணறிவு வழங்குநரான JATO Dynamics வெளியிட்ட தரவுகளின் படி, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மஹிந்திரா 17.8% ஈட்டியுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டாடா, ஹூண்டாய் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கியா ஆகியவை இடம் பெற்றுள்ளன. மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு இந்த XUV 700 காரின் அறிமுகத்தை சமயம் புதிய லோகோ, புதிய டெக்னாலஜி வசதிகள் போன்றவற்றை அறிமுகம் செய்தது. மேலும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஹூண்டாய் மோட்டார் கோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக எஸ்யூவி கார் தயாரிப்பிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.