ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ செல்லலாம்… அசரவைக்கும் மின்சார ஸ்கூட்டர்!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ செல்லலாம்… அசரவைக்கும் மின்சார ஸ்கூட்டர்!

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிளைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 22 டீலர்களை நாடு முழுவதும் நிறுவி இருக்கிறார்கள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது லிட்டர் ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. போகப்போக இதன் விலை ஏறிக்கொண்டே போகுமே தவிர இறங்காது என்பதே மக்களின் மனநிலையாக இருக்கிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் காலங்களில் பெட்ரோல், டீசலை தவிர்த்து மின்சார வாகனங்கள் அந்த இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசுக்கு மிக முக்கிய காரணம் ‘வாகனப்புகை’ தான். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. வருங்காலத்தில் சுத்தமான காற்றை கூட காசு கொடுத்து வாங்க கூடிய நிலைமை ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த மாசுபாட்டை தவிர்க்க வேண்டும் என்றால், மாற்று சக்தியை தேடி போக வேண்டும். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால், சுற்று சூழலுக்கு தீங்கின்றி பயணிக்கலாம். எனவே தான் அமெரிக்கா,இந்தியா போன்ற பெரிய நாடுகள் அனைத்தும் ‘மின்சார’ வாகன உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் அதிகமாக வெளியாகி கொண்டே இருக்கிறது. மக்களும் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஓலா,ஏதேர்,ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்கி வருகிறார்கள். இபைக் கோ (eBikeGo) நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனது இருசக்கர மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1,000 கோடி என்று கூறப்படுகிறது. இதுவரை வந்த மின்சார வாகனங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது இதுவாகும்.

Also read... அப்பாச்சி முதல் பல்சர் வரை... ரூ.1.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெஸ்ட் 5 பைக்குகள்!

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிளைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 22 டீலர்களை நாடு முழுவதும் நிறுவி இருக்கிறார்கள். சுற்றுசூழலுக்கு உகந்த இந்த மின்சார வாகனம் மிக வேகமாக செல்லக்கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். சிவப்பு, நீலம், கருப்பு, Rugged ஸ்பெஷல் எடிசன் ஆகிய வண்ணங்களில் இந்த மின்சார ஸ்கூட்டர் வெளிவருகிறது. இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

ஸ்கூட்டரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ‘3kW என்ஜின்’ வசதி தான். மணிக்கு அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த இ-பைக்கிற்குள் இருக்கும் 2 x 2 kWh பேட்டரியை மாற்ற முடியும். தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் மற்ற மின்சார ஸ்கூட்டர்களில் இந்த வசதி கிடையாது என்பது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. 3.5 மணிநேரத்தில் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 12 ஸ்மார்ட் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை ரூ. 85,000 லிருந்து ரூ 1.05 லட்சம் வரை வருகிறது. இது G1 மற்றும் G1+ என்ற இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

First published:

Tags: Electric bike