ராலி ஓட்டுநர் பிரெண்டன் ரீவ்ஸ் ஹூண்டாய் ஆஸ்திரேலியா குழுவுடன் இணைத்து, ஒற்றை தொட்டி ஹைட்ரஜனால் இயங்கும் ஹூண்டாய் நெக்ஸோ (Hyundai Nexo) வாகனத்தை 900 கி.மீ தூரத்திற்கு இயக்கி உலக சாதனையை படைத்துள்ளார்.
ஹைட்ரஜனால் இயங்கும் ஹூண்டாய் நெக்ஸோ, ஒரு பூஜ்ஜிய-உமிழ்வு வாகனமாகும். இது மெல்போர்ன் நகரத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் ப்ரோக்கன் ஹில் நகரம் வரை பயணம் செய்து உலக சாதனையை உருவாக்கியுள்ளது. துல்லியமாக ஹூண்டாய் வாகனம் 887.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளது. ஏற்கனவே பிரெஞ்சு விண்வெளி வீரரும் சோலார் இம்பல்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பெர்ட்ராண்ட் பிக்கார்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 778 கிலோமீட்டர் பயணம் செய்து சாதனையை படைத்திருந்தார்.
அவரும் முந்தைய சாதனையை உருவாக்க ஹூண்டாய் நெக்ஸோ காரையே பயன்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஹூண்டாய் நெக்ஸோ ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு சான்றிதழ் பெற்ற முதல் ஹைட்ரஜனால் இயங்கும் வாகனம் ஆகும். டபிள்யு.எல்.டி.பி நெறிமுறையின்படி, ஹூண்டாய் நெக்ஸோ ஒரு சார்ஜில் 660 கிலோமீட்டருக்கும் அதிகமான அதிகாரப்பூர்வ வரம்பைக் கொடுக்கும். இதனை வழக்கமாக ரீசார்ஜ் செய்ய 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரெண்டன் ரீவ்ஸின் கூற்றுப்படி, சாதனை படைத்த நெக்ஸோவின் ட்ரிப் கம்பியூட்டர், 807 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்ற பிறகும் ப்ரோக்கன் ஹில்லுக்கு வாகனத்தால் இன்னும் முன்னேற முடியும் என்பதைக் காட்டியது. இந்த வாகனம் மிக நீண்ட தூரம் செல்லும் என்பதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். சில்வர்டன் என்று அழைக்கப்படும் ப்ரோக்கன் ஹில்லின் புறநகரில் உள்ள ஒரு உள்நாட்டு நகரத்திற்கு செல்ல ரீவ்ஸ் முடிவு செய்தார்.
அங்கு தான் பிரபல பாலிவுட் திரைப்படமான மேட் மேக்ஸ் 2 படம் எடுக்கப்பட்டது. மேலும் ட்ரிப் கம்பியூட்டரில் 887.5 கிலோமீட்டரை எட்டும் வரை நெக்ஸோ வாகனம் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இறுதியாக எரிபொருள் தீர்ந்ததையடுத்து வாகனம் நின்றது. ரீவ்ஸ் ஒரு ராலி காரைப் போல ப்ரொடெக்சன்-ஸ்பெக் நெக்ஸோவை ஓட்டவில்லை. அதற்கு பதிலாக, அவர் செயல்திறனை மையமாகக் கொண்டு ஒட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ட்ரக்கை எவ்வாறு திறமையாக ஓட்ட வேண்டும் என்பது குறித்து தனது தந்தை பகிர்ந்த சில உதவிக்குறிப்புகளை நினைவில் கொண்டு இந்த வாகனத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார்.
மொத்தமாக இந்த இடைவிடாத வாகனத்தின் பயணம் 13 மணி 6 நிமிடங்கள் நீடித்தது. மேலும் சராசரியாக மணிக்கு 66.9 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தகவல்களின்படி, சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் நெக்ஸோவின் இன்ஸ்ட்ருமென்ட் பேனலில் குறைந்த எரிபொருள் எச்சரிக்கை முதல் முறையாக 686 கிலோமீட்டர் பயணம் செய்தபோது வந்ததாக கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car, World record