• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 2023 முதல் போக்குவரத்து வரலாற்றையே மாற்றப்போகும் பறக்கும் கார்!

2023 முதல் போக்குவரத்து வரலாற்றையே மாற்றப்போகும் பறக்கும் கார்!

பறக்கும் கார்

பறக்கும் கார்

மக்கள் உண்மையில் ஒரு சிறிய கார் மற்றும் விமானம் இணைந்த வாகனத்தை வாங்குவார்கள்; எனவே அவர்கள் நெரிசலான நகர சாலைகளில் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமில்லை.

  • Share this:
நீண்ட காலமாக ஒரு கற்பனை கதையாகவே பேசப்பட்டு வந்த பறக்கும் கார்கள் இப்போது விரைவில் நிஜமாக போகிறது. அவை வசதிகள் நிறைந்த எதிர்கால போக்குவரத்திற்கு உறுதியளிக்கின்றன. மிக முக்கியமாக இந்த பறக்கும் கார்கள் போக்குவரத்து நெரிசல்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும். அந்த வகையில் பல நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிலும் சில நிறுவனங்கள் இறுதி கட்டத்தை நெருங்கும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளன.

அவற்றில் புளோரிடாவை தளமாகக் கொண்ட LuftCar 2023 ஆம் ஆண்டிலேயே அதன் தயாரிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. LuftCar நிறுவனம் வெளியிட உள்ள அந்த தன்னாட்சி வாகனம் ஒரு பறக்கும் தொகுதியுடன் இணைக்கப்படலாம் என்றும், ஆறு ப்ரொப்பல்லர்கள் உட்பட பல காரணிகளின் உதவியுடன் மணிக்கு 220 மைல்கள் ( அதாவது 350 kmph) வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 4,000 அடி உயரத்தில் பறக்கும் எனவும், ஒரே பயணத்தில் 150 மைல்கள் (240 கிமீ) பயணிக்கும் திறன் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனம் வானில் பறக்காத போது அது எளிதாக சாலைகளில் மற்ற வாகனங்களை போல ஓடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் தொகுதி ஹைட்ரஜனால் இயக்கப்படுகிறது. ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த பறக்கும் வாகனத்தின் விலை சுமார் $350,000 ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் முதன்மையாக பெரிய நிறுவனங்கள் மற்றும் மிக விரைவாக சவாரி செய்ய விரும்பும் பணக்காரர்களுக்காக இந்த வாகனம் செயல்படும்.

Also read... நெதர்லாந்து தூதரகத்திற்காக 9 ஸ்பெஷல் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஓலா!

LuftCar இன் நிறுவனர் மற்றும் CEO சாந்த் சத்யா என்பவர் கலீஜ் டைம்ஸிடம் கூறியதாவது, “மக்கள் உண்மையில் ஒரு சிறிய கார் மற்றும் விமானம் இணைந்த வாகனத்தை வாங்குவார்கள்; எனவே அவர்கள் நெரிசலான நகர சாலைகளில் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல தொலைதூர இடங்களிலிருந்து நகரங்களுக்கு கஷ்டப்பட்டு பயணிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார். மேலும் " இந்த பறக்கும் வாகனத்தை வணிகர்களும் பயன்படுத்தலாம். எனவே அவர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிக்க , வாகனத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

CEO சாந்த் சத்யாவின் LinkedIn ப்ரோபைலை பார்த்தபிறகு தான் தெரிகிறது, அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று. இவர், லுஃப்ட்கார் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு சீமென்ஸ், ஜான்சன் கன்ட்ரோல்ஸ் மற்றும் போயிங் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். எனவே லுஃப்ட்கார் பறக்கும் வாகனம் இந்தியாவின் நெரிசல் மிகுந்த நகரங்களுக்கும் வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நிறுவனம் தற்போது துபாய் ஏர்ஷோ 2021 இல் பங்கேற்றாலும், பறக்கும் வாகனம் தயாரான பிறகு அவை எந்த நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: