ஜெர்மன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி நிறுவனமான கான்டினென்டல் இன்ஜினியரிங் சர்வீசஸ் (Continental Engineering Services - CES) ஆஸ்திரிய ஸ்டார்ட்அப் நிறுவனமான வோல்டேரியோவுடன் (Volterio) இணைந்து, எலக்ட்ரிக் வாகனங்களை தன்னியக்கமாக, அதாவது ஆட்டோநமஸ் (autonomous) ஆக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட் இவி சார்ஜிங் ரோபோவை (EV-charging robot) உருவாக்குகிறது.
இந்த ஆட்டோமெட்டிக் இவி சார்ஜிங் ரோபோவின் வெகுஜன உற்பத்தி ஆனது வருகிற 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரிய நிறுவனமான வோல்டேரியோ ஏற்கனவே ஆட்டோமெட்டிக் இவி சார்ஜிங் யூனிட்களை வழங்கி வருகிறது, மறுகையில் உள்ள சிஇஎஸ் நிறுவனமும் அதன் சொந்த தயாரிப்பை வடிவமைத்துள்ளது. இப்போது, இந்த இரண்டு நிறுவனங்களும் கைகோர்த்து, எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் மின்சார வாகனங்களை தன்னியக்கமாக சார்ஜ் செய்யக்கூடிய ரோபோவை உருவாக்க உள்ளன.
இந்த ஃபுல்லி ஆட்டோநமஸ் சார்ஜிங் (fully autonomous charging) ரோபோவானது, மின்சார வாகனத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள அண்டர்கேரியேஜ் (undercarriage) உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு காம்போனென்ட் மற்றும் தரையில் நிலைநிறுத்தப்பட்ட சார்ஜிங் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று இந்த இரு நிறுவனங்களும் கூறுகின்றன.
இவி சார்ஜிங் அமைப்பு பொருத்தப்பட்ட ஒரு பார்க்கிங் ஸ்பேஸில், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் டிரைவர் அதை நிறுத்தும் போது, இரண்டு காம்போனென்ட்களும் அல்ட்ரா-பிராட்பேண்ட் கம்யூனிகேஷன் மூலம் இணைக்கப்படும். இந்த தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் வாகனத்தின் ஃப்ளோர் சார்ஜிங் யூனிட்டை அண்டர்கேரேஜ் ரிசீவருடன் தானாக 'அலைன்' செய்யும், இந்த இணைப்பு பேட்டரியை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
இந்த 'அலைன்மென்ட்'டிற்காக அல்ட்ரா-பிராட்பேண்ட் தகவல்தொடர்பு (ultra-broadband communication) பயன்படுத்தப்படுவதாக இந்த இரு நிறுவனங்கள் கூறுகின்றன, அதே நேரத்தில் பிஸிக்கல் கனெக்ஷன் (physical connection) மூலம் யூனிட்களுக்கு இடையிலான சார்ஜிங் நிகழும் போது மின் இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்கிறது. ஃப்ளோர் யூனிட் ஆனது 30 செமீ வரை அதன் பொஷிஷனை சரிசெய்வதால், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் சார்ஜ் செய்ய இவி கார் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை துல்லியமான இடத்தில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Also read... ஒரு பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் கார் – பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய மாடல்
ஒட்டுமொத்தமாக, இந்த ஆட்டோமெட்டிக் இவி-சார்ஜிங் ரோபோவானது, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கைமுறையாக செய்யப்படும் சார்ஜிங் இணைப்பின் தேவையை நீக்குகிறது. தற்போதைய வயர் அடிப்படையிலான இவி சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது, செயல்பாட்டின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானதாக இருக்கும் அதே சமயம் விரைவானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி சிஇஎஸ் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோஃப் பால்க்-கியர்லிங்கர் கூறுகையில், ஆட்டோமெட்டிக் சார்ஜிங் ரோபோவானது மின்சார இயக்கத்தை மிகவும் வசதியாகவும், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான பரிணாம வளர்ச்சியில் ஒரு உண்மையான மேம்பாடு ஆகும்" என்கிறார்.
சிஇஎஸ் மற்றும் வோல்டேரியோ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான உடன்படிக்கையின் கீழ், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உற்பத்திக்கு அருகிலான நிலையை (near-production status) அடைவது வோல்டேரியோ நிறுவனத்தின் பொறுப்பாகும். பின்னர் 2024 ஆம் ஆண்டளவில் ஜெர்மனியில் வால்யூம் ப்ரொடெக்ஷனை நெருங்கும் போது சிஇஎஸ் நிறுவனம் இந்த திட்டத்தை மேற்பார்வையிடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.