• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி - சீன நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி - சீன நிறுவனம் திட்டம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதனிடையே DAO EVTech நிறுவனத்தின் Dao 703 என்ற அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகமாக உள்ளது.

  • Share this:
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் வரலாறு காணாத விலையேற்றத்தால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடு பிடித்து வருகிறது. எனவே பல முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் டூ வீலரை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சீனாவை சேர்ந்த ஒரு எலெக்ட்ரிக் டூ வீலர் நிறுவனம் ஏற்றுமதி காரணங்களுக்காக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு தனது உற்பத்தி தளத்தை மாற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் டூ வீலர்கள் உற்பத்தியில் சீனா தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நாடாக இருக்கிறது. கடந்த 2020-ல் சீனா மொத்தம் 33.9 மில்லியன் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்தது. இது உலக எலெக்ட்ரிக் டூ வீலர் சந்தையில் 97% ஆகும். இதனிடையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களது எலெக்ட்ரிக் டூ வீலரை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களுடன், சித்தூரில் ஒருங்கிணைந்த மின்சார இரு சக்கர வாகனத் தொழிற்சாலையை அமைக்க ஆந்திர அரசுடன் சீனாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான DAO EVTech பேச்சு நடத்தி வருகிறது.

இதனிடையே DAO EVTech நிறுவனத்தின் Dao 703 என்ற அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூ.1.20 லட்சம் என்றும், மானியங்களுக்கு பிறகு ரூ.86,000 என்ற விலையில் இதனை வாங்கலாம் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்திய EV மார்க்கெட்டில் நுழைந்த பிறகு, DAO EVTech நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க விரும்புகிறது.

DAO EVTech நிறுவனத்தின் உயரதிகாரியான மனீஷ் சிங் இதுபற்றி கூறுகையில், "சித்தூரில் ஒரு பெரிய உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையுடன் ஆந்திர அரசிடம் பேசி வருகிறோம். கிட்டத்தட்ட இதற்கான அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது. அனுமதி கிடைத்த பிறகு சித்தூரில் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும். இதன் பின்னர் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வோம்.

Also read... ஹூண்டாய் முதல் நிசான் வரை - தீபாவளிக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் கார்கள்!

எங்களிடம் ஏற்கனவே மார்க்கெட் பேஸ் உள்ளது" என்றார். மேலும் பேசிய மனீஷ் சிங், சித்தூரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாகவும், இந்த ஆலை அமைக்கப்பட்ட உடன் அமெரிக்காவிற்கு பூஜ்ஜிய இறக்குமதி வரியை (zero import duty) மூலதனமாக்க விரும்புவதால், சீனாவிலிருந்து செய்யப்பட்டு வரும் ஏற்றுமதியை இந்தியாவிற்கு மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் புனே அருகே உள்ள சாகான் மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஜஹிராபாத்தில் லீஸ் இடத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சித்தூர் ஆலை செயல்படத் தொடங்கிய பிறகு மேற்கண்ட இடங்களில் தயாரிப்பு நிறுத்தப்பட்டு ஆந்திராவிற்கு மாற்றப்படும் என்றும் DAO EVTech கூறி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: