இன்று இருசக்கர வாகனங்களுக்கு இணையாக அன்றாடம் பலரும் காரை பயன்படுத்த துவங்கி விட்டனர். வழக்கமாக தினசரி பணிகளுக்காக காரை எடுத்து சென்றாலும் சரி, வார இறுதியில் வெளியூர்களுக்கு போவதற்காக நெடுஞ்சாலை பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சரி எப்போது என்ன பிரச்சனை வாகனத்தில் ஏற்படும் என்று கணிக்க முடியாது.
பயணத்திற்கு தயாராகும் முன் ஒரு முறைக்கு இருமுறை காரின் கண்டிஷனை செக் செய்து விட்டு புறப்பட்டாலும் கூட வழியில் திடீரென ஏற்படும் ரிப்பேரால் வாகன நெரிசல் மிக்க சாலைகளிலோ அல்லது உதவிக்கு கூட யாரும் இல்லாத நெடுஞ்சாலையின் பாதி வழியில் அல்லது மலை பிரதேசங்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் கூட அவஸ்தைப்பட வேண்டிய சூழல் ஏற்படும். வாகன ஓட்டிகள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் மன அழுத்தம் தர கூடிய சூழ்நிலைகளில் மேற்கண்டவை கொஞ்சமே. இன்னும் இது போல பல நேரங்களில் நிலைமையை எளிதாக சமாளிக்க சில எளிய பொருட்களை எப்போதும் காரில் வைத்திருப்பது அவசியம்.
வீட்டை விட்டு காரை எடுத்து கொண்டு வெளியே சென்றாலே எப்போதும் காரில் வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முதலுதவி பெட்டி:
வாகனத்தில் வெளியே சென்றால் அதில் முக்கியமாக இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள் முதலுதவி பெட்டி. விபத்து எங்கே எப்போது நாடாகும் என யாருக்கும் தெரியாது என்பதால் கார் ஓட்டுபவரோ, அல்லது வேர் யரேனும் காயமடைய நேர்ந்தால் தக்க உதவி செய்யும் முதலுதவி பெட்டி. காயம்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவரை பார்த்து கொள்ள உதவும் முதலுதவி பெட்டியில் அடிபட்டால் தடவக்கூடிய ஆயின்மென்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்மென்ட்கள், கட்டுவதற்கான துணி, கிளென்சிங் ஆல்கஹால் சொல்யூஷன் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.
ஜம்பர் கேபிள்கள்:
இயந்திரங்கள் எப்போதும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. கார் பேட்டரியில் பழுது ஏற்பட்டு நடு வழியில் கார் பழுதானால், சாலையோரங்களில் அதிக நேரம் சிக்கி தவிப்பதை தவிர்க்க ஜம்பர் கேபிள்கள் உதவும். நீண்ட காலம் ஒரே கேபிள்களை பயன்படுத்த கூடாது. அதே போல நீண்ட பயணத்திற்கு காரை வெளியே எடுக்கும் போதெல்லாம் கேபிள்கள் சேதமடைந்திருக்கிறதா அல்லது மிகவும் துருப்பிடித்துள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
Also read... ஸ்மார்ட்போன் டூ எலக்டிரிக் கார் உற்பத்தி - சியோமி மெகா ப்ளான்!
ஃபிளாட் டயர் கிட்:
டயர் பஞ்சராவது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று. டயர்களில் திடீரென்று காற்று இறங்கினால் ஃபிளாட் டயர் கிட் மிகவும் உதவிகரமாக இருக்கும். காரின் பின்புறத்தில் எப்போதும் போதுமான காற்றுடன் கூடிய ஸ்டெப்னி டயர் வைத்திருங்கள். மேலும், ஜாக், லக் ரெஞ்ச் போன்ற சில அடிப்படைக் கருவிகளையும் கார் பயணத்தின் போது வைத்துக் கொள்ளுங்கள்.
தீ அணைப்பான்
சில காரணங்களால் காரில் தீ விபத்து ஏற்பட நேரிட்டால் தீயை அணைக்கும் Fire extinguisher இயந்திரம் மிகவும் உதவியாக இருக்கும். குறைந்தபட்சம் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைவதற்கு முன் நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.