Home /News /automobile /

ரூ.50,000 வரை டிஸ்கவுண்டில் வழங்கப்படும் ஹூண்டாய் கார்கள் - ஆஃப்ர் பெற முந்துங்கள்

ரூ.50,000 வரை டிஸ்கவுண்டில் வழங்கப்படும் ஹூண்டாய் கார்கள் - ஆஃப்ர் பெற முந்துங்கள்

 ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் சாண்ட்ரோ காருக்கும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்தக் காரில் பெட்ரோல் வேரியண்ட் வாங்கினால் ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு தற்போது டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் வணிகத்தை மேம்படுத்தும் விதமாக, குறிப்பிட்ட ஹூண்டாய் மாடல்களுக்கு ரூ.50,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரை பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், எஸ்யூவி கிரேட்டா மற்றும் அல்கசார், வென்யூ, டக்சன், எலந்த்ரா மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற அதிக விற்பனை நடைபெறும் மாடல்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தாது. ஹூண்டாய் ஐ20, கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா மற்றும் சாண்ட்ரோ போன்ற மாடல்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல் இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆஃபரை நீங்கள் கேஷ் டிஸ்கவுண்ட், கார்ப்பரேட் பெனிபிட்ஸ் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் என எப்படி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

மிக அதிகபட்சமாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் கார்களுக்கு ரூ.48,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த காரில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளன. மானுவல் மற்றும் ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டு வகையில் வரும் ஐ10 நியோஸ் காரில் 5 பேர் அமர்ந்து செல்லலாம். இந்தக் காரின் விலை ரூ.5.29 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் ஆகும்.

இதேபோன்று ஹூண்டாய் சாண்ட்ரோ காருக்கும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்தக் காரில் பெட்ரோல் வேரியண்ட் வாங்கினால் ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆனால், சிஎன்ஜி மாடலுக்கு இந்த ஆஃபர் பொருந்தாது. இது 5 பேர் பயணிக்கும் வகையில் சீட்டிங் கெபாசிட்டி உடையது. இதில் 5 ஸ்பீடு மானுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளன. இந்தக் கார் ரூ.4.86 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் வரையில் விற்பனை ஆகிறது.

Also read... பிப்ரவரி 2022 கார் டிஸ்கவுண்ட்ஸ்: ரூ.38,000 வரை சலுகை வழங்கும் மாருதி சுசுகி!

ஹூண்டாய் ஐ.20 வகை காருக்கும் வாடிக்கையாளர்கள் டிஸ்கவுண்ட் பெற்றுக் கொள்ளலாம். டீசல் வேரியண்ட் ஐ20 காருக்கு ஆஃபர் உண்டு. ஆனால், பெட்ரோல் வேரியண்ட் கொண்ட காருக்கு ஆஃபர் பெற முடியாது. இதன் விலை ரூ.6.98 லட்சம் முதல் ரூ.11.47 லட்சம் ஆகும்.

வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் ஆஃபர்களை வாரி வழங்குவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே அளவுக்கான ஆஃபர்களை அந்த நிறுவனம் வழங்கியது. அப்போது சாண்ட்ரோ மற்றும் ஐ20 கார்களுக்கு ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டது. மேலும் ஐ10 நியோஸ், ஆரா போன்ற கார்களுக்கும் டிஸ்கவுண்ட் அளிக்கப்பட்டது என்றாலும், வென்யூ, கிரேட்டா, அல்கசார், எலந்த்ரா போன்ற கார்களுக்கு அப்போதும் டிஸ்கவுண்ட் வழங்கப்படவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Hyundai

அடுத்த செய்தி