ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

வாகன காப்பீடு செய்யும்போது இந்த ஆட்-ஆன்கள் மிக முக்கியம் - நிச்சயமாகப் பலன் கொடுக்கும்!

வாகன காப்பீடு செய்யும்போது இந்த ஆட்-ஆன்கள் மிக முக்கியம் - நிச்சயமாகப் பலன் கொடுக்கும்!

வாகன காப்பீடு ஆட்-ஆன்கள்

வாகன காப்பீடு ஆட்-ஆன்கள்

Motor Insurance Add-ons : அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமாகியுள்ளது என்ற நிலையில் அதில் சில சேவைகள் காப்பீட்டுடன் சேர்க்கும் ஆட்-ஆன்கள் மூலம் கிடைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உணவு, உடை, வீடு போன்ற அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாக மோட்டார் வாகனங்கள் மாறியுள்ளன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் சென்று சேருவதற்கான கருவிகளாக இவை உள்ளன. அதே சமயம், மக்கள் தொகை கணக்கிற்கு ஏற்ப வாகனங்களும் பெருகியுள்ளதால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அதிவேக பயணம், வாகன நெருக்கடி, சில ஓட்டுநர்களின் கவனக்குறைவு, மது அருந்திவிட்டு நிதானமின்றி வாகனம் ஓட்டுதல் என பல காரணங்களால் சாலைகள் ஆபத்து மிகுந்தவையாக மாறியுள்ளன. சாலையில் விபத்துகள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க முடியாது என்றாலும், விபத்தில் சிக்கும் வாகனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மோட்டார் இன்சூரன்ஸ் அவசியமாகிறது.

கடந்த 1988ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், சாதாரணமாக நீங்கள் எடுக்கக் கூடிய வாகன காப்பீடுகளில் பல விஷயங்கள் உள்ளடங்கி வராது. அதாவது, சிறப்பான பலன்களைப் பெற வேண்டும் என்றால் சில ஆட்-ஆன்களை நீங்களாகவே சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அந்த வகையில், பொதுவான வாகன காப்பீட்டுடன் சேர்த்து, எந்தெந்த ஆட்-ஆன்கள் முக்கியம் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இஞ்சின் பாதுகாப்பு, ஓட்டுநர் பாதுகாப்பு, திருட்டு தடுப்பு போன்ற காப்பீடுகளை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். அதுபோலவே கீழ்க்காணும் ஆட்-ஆன்களும் முக்கியமானவையே.

தினசரி அலோவன்ஸ் ஆட்-ஆன்

வொர்க்‌ஷாப்பில் உங்கள் காரின் பழுதுகளைச் சீர் செய்ய சில நாட்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதுவரையிலும் நீங்கள் சில நாட்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அது ஆட்டோ அல்லது வாடகை கார் அல்லது பேருந்து என ஏதுவானதாகவும் இருக்கலாம்.

இதுபோன்ற போக்குவரத்து செலவுகளுக்காக நாளொன்றுக்கு ரூ.500 வரையில் 14 நாட்களுக்கு நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு நிறுவனங்களைப் பொருத்து இது மாறுபடலாம்.

உடைமைகளுக்கான இழப்பீடு

கார் திருட்டுப் போனால் அது நிச்சயமாகப் பேரிழப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்துடன், விலைமதிப்பு மிகுந்த பொருட்கள் சில காணாமல் போனால் கவலை கூடுதலாகி விடும். ஆகவே, உடைமைகளுக்குக் காப்பீடு செய்யும் பட்சத்தில் மொபைல், டேப்லட் போன்ற பொருட்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும், லேப்டாப்பிற்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் இழப்பீடு பெறலாம்.

Also Read : இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா?

சாவிக்கு காப்பீடு

இப்போதெல்லாம் உங்கள் காருக்கு போலி சாவி தயாரிப்பது வெகு சுலபம். அதைப் பயன்படுத்தி கார் திருட்டு போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்காக அதிநவீன பாதுகாப்பு அம்சத்துடன் லாக் மற்றும் சாவிகள் வருகின்றன. ஆனால், நாம் ஞாபகமறதியில் சாவியைத் தொலைத்துவிட்டால் என்ன ஆவது?

அதுவும் பாதுகாப்பு நிறைந்த சாவிகள் விலை கூடுதலானவை. அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மட்டுமே அதனைத் தயாரிக்க முடியும். ஆகவே, புது லாக் சிஸ்டம் மற்றும் சாவி பெறுவதற்கான காப்பீடு அவசியமானது.

Published by:Janvi
First published:

Tags: Bike, Car, Insurance