சென்சார் உடன் கனெக்டட் ஆன உலகின் முதல் 5ஜி டயர்..!

காரின் சென்சார் ஓட்டுநரின் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் காரின் கூடுதல் பாதுகாப்புக்கு பிரெல்லி 5 ஜி டயர் துணை நிற்கும் என்கிறது பிரெல்லி.

சென்சார் உடன் கனெக்டட் ஆன உலகின் முதல் 5ஜி டயர்..!
பிரெல்லி (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: November 18, 2019, 4:38 PM IST
  • Share this:
கார் உடன் சென்சார் இணைக்கப்பட்ட கனெக்டட் 5ஜி டயர் ஒன்றை உலகிலேயே முதன்முறையாக பிரெல்லி டயர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எரிக்சன், ஆடி, இடல்டிசைன் மற்றும் கேடிஹெச் உடன் இணைந்து பிரெல்லி டயர்ஸ் 5ஜி தொழில்நுட்பத்துடனான டயரை டெமோ காண்பித்தது. சாலையில் ஏற்படும் இடர்களை சென்சார் மூலம் அறிந்து வாகனத்துக்கு தகவல் அனுப்பும் தொழில்நுட்பமாக இது இருக்கும்.

5ஜி பிரெல்லி டயரில் பொருத்தப்பட்டு இருக்கும் உட்புற சென்சார் மூலம் அனைத்து ரகமான சாலை பிரச்னைகளையும் அறிய முடியுமாம். நீர்ப்பாதையில் பயணிக்க, மலைப்பாதை, மோசமான பாதைகள் என அனைத்துக்கும் ஏற்ப கார் தன்னை தகவமைத்துக் கொள்ள இந்த டயரின் சென்சார் பயன்படுமாம்.


காரின் சென்சார் ஓட்டுநரின் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் காரின் கூடுதல் பாதுகாப்புக்கு பிரெல்லி 5 ஜி டயர் துணை நிற்கும் என்கிறது பிரெல்லி. அனைத்து விதமான கனெக்டட் கார்களுக்கும் கட்டமைப்புக்கும் ஏற்ற வகையில் இந்த 5ஜி டயர் விற்பனைக்கு வர உள்ளது.

மேலும் பார்க்க: உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கே லாயக்கற்ற நகரங்களின் பட்டியல்... இந்திய நகரத்துக்கு முதலிடம்..!
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading