ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஜொலிக்கும் வண்ணத்தில் வெளிவர தயாராகும் புதிய ‘தார்’..!

ஜொலிக்கும் வண்ணத்தில் வெளிவர தயாராகும் புதிய ‘தார்’..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தற்போது இருக்கும் மாடல் தார்-ஐ விட புதிய மாடல் 4x2 RWD 1.5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய வாகன சந்தையின் முன்னேற்றத்தை மஹிந்திரா நிறுவனத்தை தவிர்த்துவிட்டு கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மஹிந்திரா நிறுவனம் மிக முக்கியமான ஒன்று. மிகவும் பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் சர்வதேச கார் தயாரிப்பாளர்களுடன் போட்டி போடும் அளவிற்கு மிகவும் நவீனமாகவும், அண்மை தொழில் நுட்பத்துடனும் கார்களை அறிமுகம் செய்து இன்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது மஹிந்திரா தயாரிப்புகள். அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் வாடிக்கையாளர்களை கவர்ந்த வேரியன்ட் ஆகும்.

தார் மாடலிலும் மஹிந்திரா அவ்வப்போது நேர்த்தியான வடிவமைப்பு மாற்றங்களை செய்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் ‘தார்’ இப்போது புதிய மாற்றங்களுடன் வெளியாக உள்ளது. ஆம், இதுவரை ஃபோர் வீல் டிரைவ் காராக இருந்த தார் தற்போது ரியர் வீல் டிரைவ் காராக வெளியாக உள்ளது. மூன்று கதவுகளுடன் வெளியாகி வந்த தார் இப்போது ஐந்து கதவுகளுடன் புதிய மாடலாக வெளியாகியுள்ளது. அதில் நேர்த்தியான உட்புற வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய தார் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் அடுத்த படியாக இப்போது 4x2 RWD(Rear Wheel Drive) மாடலில் புதிய தார் உருவாகி வருகிறது. இந்த புதிய மாடலை தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்காக முற்றிலும் புதிய வண்ணங்களில் இந்த மாடல் அறிமுகமாக உள்ளது. வழக்கமாக கார்களுக்கு பயன்படுத்தும் வண்ணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கண்ணைக் கவரும் வண்ணங்கள் இந்த மாடலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக வெளிவரும் நிறங்களோடு, கண்ணைப் பறிக்கும் தங்க நிறம், அக்குவா மரைன், நாப்போலி பிளாக், சிவப்பு மற்றும் கேலக்சி கிரே உள்ளிட்ட தனித்துவமான வண்ணங்களிலும் புதிய தார் 4x2 RWD தயாராகி வருகிறது.

புதிய மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமாக தார்-ல் 2.2 டீசல் மற்றும் 2.0 பெட்ரோல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த புதிய 4x2 RWD-ல் சிறிய XUV-300 காரில் உள்ள 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் எஞ்சினின் அதிகபட்ச சக்தி 130 hp ஆக இருக்கும் நிலையில் 1.5 லிட்டர் டர்போ எஞ்சினின் சக்தி 115 hp. சிறிய அளவிலான வேறுபாடுதான். ஆனால் புதிய 4x2 RWD- மாடல் பெட்ரோல் வேரியன்ட் அதே 2.0 லிட்டர் எஞ்சினோடு வெளியாக உள்ளது.

தற்போது இருக்கும் மாடல் தார்-ஐ விட புதிய மாடல் 4x2 RWD 1.5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த புதிய மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த புதிய தார் 4x2 RWD மாருதி சுசுகியின் ஜிம்மி-SUVக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜொலிக்கும் வண்ணத்தல் வலம் வர தயாராகி வருகிறது தார் 4x2 RWD ர் எங்சி

செய்தியாளார் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Anand Mahindra, Automobile, Mahindra, Thar