Home /News /automobile /

முட்டை வடிவ கேபினுடன் இரு இருக்கைகளை கொண்ட ஆப்பிள் எலக்ட்ரிக் கார்

முட்டை வடிவ கேபினுடன் இரு இருக்கைகளை கொண்ட ஆப்பிள் எலக்ட்ரிக் கார்

two-seater Apple car

two-seater Apple car

Apple Car | இந்த வாகனம் 360-டிகிரி நகரக்கூடிய ஒரு மின்சார நான்கு சக்கர வாகனம் ஆகும். இதன் கேபின் ஒரு முட்டை வடிவத்தை பெற்றுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் டைட்டனின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் மின்சார கார் பயன்பாட்டிற்கு வர இன்னும் வெகு காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வாகனம் 2028 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2028ம் ஆண்டு வராமல் கூட போகலாம் என்று வட்டார தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சில படைப்பாற்றல் மிக்கவர்கள் வாகனத்தின் விளக்கங்களை வைத்து இந்த தனித்துவமான மின்சார கார் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வருகின்றனர். அதன்படி வடிவமைப்பாளர் தேவங்கா போரா என்பவர் இரண்டு இருக்கைகள் கொண்ட ஆப்பிள் பாட் வடிவமைப்பை தற்போது உருவாக்கியுள்ளார்.

அவர் வடிவமைத்ததன் படி, இந்த வாகனம் 360-டிகிரி நகரக்கூடிய ஒரு மின்சார நான்கு சக்கர வாகனம் ஆகும். இதன் கேபின் ஒரு முட்டை வடிவத்தை பெற்றுள்ளது. மேலும் அந்த கேபினில் இரு இருக்கைகள் உள்ளன. உட்புறம் ஒரு நல்ல சுத்தமான பூச்சு மற்றும் அமர்பவர்களுக்கு சாய்வு அமைப்புடன் இருக்கை வசதி இருக்கும்படி உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வாகனம் முழுவதும் வெள்ளை நிற உலோக பூச்சு கொண்டு பூசப்பட்டுள்ளது. மேலும் கேபின் பின்புறத்தில் நேர்த்தியான தோற்றத்தில் ஆப்பிள் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் வெளிப்புற தோற்றத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த வடிவமைப்பாளர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆப்பிள் காரின் அம்சங்களை மனதில் வைத்து நான் இந்த மைக்ரோ காரை உருவாக்கினேன். இது ஒரு தானியங்கி மட்டுமல்லாமல், முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட ஒரு ஆப்பிளிக் வாகனம் ஆகும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CT4liE-JOAi/?utm_source=ig_embed&ig_rid=39414f6b-113c-463b-8cb0-4a00b985849d

இந்த ரெண்டிஷன் ஆப்பிள் கார் அதன் சுத்தமான வெள்ளை உடலமைப்பில் நேர்த்தியான அம்சங்களுடன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு அற்புதமான காட்சியை வழங்கியது என்றாலும், ஐபோன் நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் கார் திட்டத்தைப் பற்றி எதுவும் பேசாமல் இருப்பதால், இந்த வாகனம் எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ப்ராஜெக்ட் டைட்டன் முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு, ஐபோன் மற்றும் ஐபாட் நிர்வாகியாக மாறிய முன்னாள் ஃபோர்டு பொறியாளர் ஸ்டீவ் ஜடேஸ்கியின் வழிகாட்டுதலின் பேரில் நிர்வகிக்கப்பட்டது.

இது பின்னர் முன்னாள் ஹார்டுவேர் பிரிவின் தலைவர் டான் ரிச்சியோ மற்றும் அவருக்கு முன்னோடியான பாப் மான்ஸ்ஃபீல்ட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். முன்னாள் டெஸ்லா நிர்வாகி டக் ஃபீல்ட் 2018 முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை இதற்கு தலைவராக இருந்தார். ஃபீல்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறியதும், இந்த திட்டத்தின் ஆவணங்கள் கெவின் லிஞ்சின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை இந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் வடிவமைப்பாளர் தேவங்கா போரா வடிவமைத்த ஆப்பிள் மின்சார வாகனத்தின் மாதிரி ஆப்பிளின் பார்வைக்கு செல்லுமா? இல்லை அவர்கள் இதைவிட மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட வாகனத்தை வெளியிடுவார்களா? என்பது தெரியவில்லை.
Published by:Selvi M
First published:

Tags: Apple, Automatic car, Automobile, Electric car

அடுத்த செய்தி