Home /News /automobile /

விரைவில் உயருகிறது Suzuki பைக்குகளின் விலை.... எவ்வளவு சதவீதம் தெரியுமா.?

விரைவில் உயருகிறது Suzuki பைக்குகளின் விலை.... எவ்வளவு சதவீதம் தெரியுமா.?

Suzuki Motorcycles

Suzuki Motorcycles

Suzuki Motorcycles | கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து பொருட்களின் விலை விண்ணை முட்ட தொடங்கியுள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலை ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி மோட்டர் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிட்(SMIPL)-யின் தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்ரேஷன், உலகம் முழுவதும் 125 சிசி மற்றும் 300 சிசி பைக்களின் ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரான தேவாஷிஷ் ஹண்டா கூறுகையில் "யூனிட்களின் எண்ணிக்கையில், நாங்கள் ஏற்கனவே சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறோம். கடந்த ஆண்டு, எங்கள் தலைமையகம், அனைத்து சிறிய திறன் கொண்ட (125-250 அல்லது 300சிசி) பைக்களுக்கும் முதன்மையான மையமாக சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா தொழிற்சாலை இருக்கும் என முடிவு செய்திருந்தோம்.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போதும் குறிப்பிடத்தக்க சில பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது” என அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்து, ஒரு லட்சத்து 45 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டும் அதேபோல் விற்பனையை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து வருவதாக சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ​​Gixxer மோட்டார் பைக் சார்க் நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ASEAN, ஆப்பிரிக்கா மற்றும் அதன் சொந்த நாடான ஜப்பான் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்த வாகன சந்தையில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 938 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், அதன் உற்பத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அலகுகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 

செமிகண்டக்டர் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும், நடப்பு ஆண்டில் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் செமிகண்டக்டர் தட்டுப்பாடு நீடித்து வருவதால், தற்போதைய உற்பத்தி திறன் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சுஸுகி மோட்டார்ஸ் சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை தொழில்துறை புள்ளிவிவரங்களின்படி, உள்நாட்டு சந்தையில் 17 சதவீத வளர்ச்சி, அதாவது இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ள ஒரே இரு இருசக்கர வாகன உற்பத்தியாளராக சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

Also Read : OLA Electric Scooter தந்த ஆபத்தான அனுபவம் - ஸ்கூட்டரை விற்ற நபர்.. என்ன நடந்தது.?

சுஸுகியின் விற்பனை மற்றும் உற்பத்தி குறித்து ஹண்டா தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, நிறுவனத்தின் உற்பத்தி வாடிக்கையாளர்களின் தேவையை விட பின்தங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முக்கியமாக குறைக்கடத்தி பற்றாக்குறை காரணமாக, கடந்த காலத்தில் உற்பத்தி குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் புத்துயிர் பெற முயற்சித்தாலும், செமிகண்டக்டர் பிரச்சனை காரணமாக அது நடக்காது என தெரிவித்துள்ளார்.



தற்போது நகரப்புறங்களில் இருந்து கிராமப்புறம் நோக்கி விற்பனை சீரமைக்க சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆனாலும் 2022 காலண்டில், செமிகண்டக்டர் பற்றாக்குறை நீடிக்கும் என்பதால் உற்பத்தி பாதிப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து பொருட்களின் விலை விண்ணை முட்ட தொடங்கியுள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலை ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் இருசக்கர வாகனங்களில் விலை ஏறக்குறைய ஒரு சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் நாட்டில் Intruder, Gixxer போன்ற இருசக்கர வாகனங்களையும் மற்றும் Hayabusa, V Strom 650 போன்ற சூப்பர் பைக்குகளை விற்பனை செய்கிறது. Access 125, Avenis மற்றும் Burgman Street ஆகிய ஸ்கூட்டர்களும் அடங்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி