ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா, எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தை பிரபல ரெனால்ட் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த தனது முதல் காரை வரும் 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜிடி ஓப்பரஸ் 1 என பெயரிடப்பட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் காரானது, ஏற்கனவே சந்தையில் உள்ள சூப்பர் பிரீமியம் கார்களான பிஎம்டபிள்யூ ஏஜிஸ் 7 சிரீஸ், போர்ஷே ஏஜிஸ், டேக்கான் ஆகியவற்றிற்கு போட்டியாக 2024ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது.

  ஹார்ட் அட்டாக் மானிட்டர்:

  முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. டிரைவரிடம் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு அவரிடம் பேச ஆரம்பிக்கும். அதற்கு ஓட்டுநர் எந்தவிதமான பதிலையும் தரவில்லை என்றால், ஏதோ விபரீதம் நிகழ்வதை செயற்கை நுண்ணறிவு புரிந்து கொள்ளும். உடனடியாக காரின் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சாலை ஓரமாக பத்திரமாக பார்க் செய்யும். ஸ்மார்ட் காக்பிட்டில் உள்ள ன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மருத்துவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்.

  Read More: பத்தே மாதங்களில் இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் சாதனை மைல்கல்லை எட்டிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.!

  ரெனால்ட் நிறுவனத்தின் தெற்காசியத் தலைவரும், பியான்கா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவருமான சோ வெய்மிங் கூறுகையில், “எங்களுடைய கார் மூலமாக ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும் அது போதுமானது. நாங்கள் ஆம்புலன்ஸை உருவாக்கவில்லை. மக்களுக்கு உதவக்கூடிய ஸ்மார்ட்டான பீரிமியம் கார்களை உருவாக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

  சீனாவின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், கடந்த ரெனால்ட் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது இவர் தலைமையில் தான் பியான்கா நிறுவனம் சூப்பர் பிரீமியம் கார்களை தயாரித்து வருகிறது. சீனாவின் ஸ்டார்அப் நிறுவனமான பியான்கா இதுவரை முதலீட்டாளர்களிடம் இருந்து $1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை திரட்டியுள்ளது. 3 முதல் 5 மாடல்களைக் கொண்ட சூப்பர் பிரீமியம் கார்களை, ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் யூனிட்கள் வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்த மாருதி சுசூகி..!

  சீனாவில் விற்பனையாகுமா?

  சீனா சூப்பர் பிரீமியம் கார்களின் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இங்குள்ள மில்லியன் கணக்கானவர்களை குறிவைத்தே எலெக்ட்ரிக் காரின் சூப்பர் பிரீமியம் மாடலை சந்தைப்படுத்த உள்ளதாக பியான்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை ஓபஸ் 1 அதிகம் விற்பனையாகும் சூப்பர் பிரீமியம் எலெக்ட்ரிக் காராக உள்ளது. இது 898,000 யுவானில் ($123,000) தொடங்கி 1.8 மில்லியன் யுவான் வரை விற்பனையாகி வருகிறது.

  மேலும் இளம் தலைமுறையினர் இடையே பட்ஜெட் ப்ரெண்ட்லி கார்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. அதேபோல் சீனாவில் 35 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் தான் அதிகம் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்குகின்றனர். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்து வரும் நிலையில், அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இருந்து காப்பாற்றக்கூடிய சூப்பர் பிரீமியம் காரை விரும்புவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Electric car, Heart attack