கோவை அருகே தென்பட்ட புதிய ‘நியூ-ஜென் மஹிந்திரா தார்’!

2020-ம் ஆண்டு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய மஹிந்திரா தாரின் வித்தியாசமான தோற்றம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

கோவை அருகே தென்பட்ட புதிய ‘நியூ-ஜென் மஹிந்திரா தார்’!
மஹிந்திரா தார்
  • News18
  • Last Updated: December 23, 2018, 6:15 PM IST
  • Share this:
கோயம்புத்தூர் அருகே எடுக்கப்பட்ட அடுத்த தலைமுறையினருக்கான மஹிந்திரா தார் டெஸ்ட் டிரைவ்-ன்  புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கோயம்புத்தூர் பகுதிகளில் டெஸ்ட் ட்ரைவில் ஈடுபட்ட வந்த புதிய தலைமுறையினருக்கான மஹிந்திரா தார்-ன் தோற்றம் தார் பிரியர்களை வாய்பிளக்கச் செய்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நல்ல அகலமான தோற்றத்தில் உள்ளது இந்தப் புதிய தார். தார்பாய் போர்த்தியது போன்ற மேற்கூரை, டெஸ்ட் வாகனம் என்பதற்கான டெஸ்ட் பாக்ஸ் பொருத்தப்பட்ட பின் தோற்றம் என அசத்தலாகவே உள்ளது இப்புதிய தார்.

‘நியூ-ஜென் மஹிந்திரா தார்’ பின்புறத் தோற்றம்2019-ம் ஆண்டில் மட்டும் இரண்டு புதிய வாகனங்களைக் களம் இறக்கும் முயற்சியில் மஹிந்திரா தீவிரமாக இறங்கி உள்ளது. மஹிந்திராவின் புது வரவுகளுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள  வேளையில் 2020-ம் ஆண்டில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ‘நியூ-ஜென் தார்’ தனது தோற்றத்தால் பலமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த புதிய  ‘நியூ-ஜென் தார்’ இன்றைய சட்ட விதிமுறைகளுக்கு ஏற்றவாறு என்ஜின் மற்றும் புகை வெளியீடு தரக் கொள்கைகளைப் பின்பற்றியே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: சாடிஸ்ட் பிரதமர் , சாடெஸ்ட் ஸ்டாலின்... ஸ்டாலின் VS தமிழிசை
First published: December 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்