முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.5.70 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2022 Citroen C3

ரூ.5.70 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2022 Citroen C3

Citroen C3

Citroen C3

Citroen C3 | இந்தியாவில் C3-ஐ தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது Citroen நிறுவனம். இதற்கு முன் இந்தியாவில் C5 Aircross-ஐ அறிமுகம் செய்திருந்தது இந்நிறுவனம். Citroen C3 நாட்டில் நிறுவனத்தின் இரண்டாவது அறிமுகமாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன் (Citroen) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய C3 ஹேட்ச்பேக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆல்-நியூ 2022 Citroen C3 கார் இந்தியாவில் ரூ.5.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki Ignis, Tata Punch மற்றும் Nissan Magnite மற்றும் Renault Kiger போன்ற சப்காம்பாக்ட் SUV-க்களுக்கு போட்டியாக இந்தியாவில் C3-ஐ தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது Citroen நிறுவனம். இதற்கு முன் இந்தியாவில் C5 Aircross-ஐ அறிமுகம் செய்திருந்தது இந்நிறுவனம். Citroen C3 நாட்டில் நிறுவனத்தின் இரண்டாவது அறிமுகமாகும்.

இந்த கார் மாடல் 10 கலர் ஆப்ஷன்கள், 2 வேரியன்ட்கள் மற்றும் 2 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. லைவ் டிரிம்மை ரூ. 5.70 லட்சத்தின் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ள Citroen, டாப்-ஸ்பெக் ஃபீல் டிரிம்மின் விலையை ரூ.8.06 லட்சமாக நிர்ணயித்துள்ளது. பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரின் இந்த ஹை-ரைடிங் ஹேட்ச்பேக் காருக்கு டீலர்ஷிப்கள் மற்றும் நிறுவனத்தின் வெப்சைட்டில் ரூ.21,000 டோக்கன் தொகையில் கடந்த ஜூன் முதலே புக்கிங் ஓபன் செய்யப்பட்டு உள்ளது.

வேரியன்ட்ஸ் வாரியான Citroen C3 கார்களின் அறிமுக விலைகள் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி):

1.2P லைவ் - ரூ 5,70,500

1.2P ஃபீல் - ரூ 6,62,500

1.2P ஃபீல் வைப் பேக் - ரூ 6,77,500

1.2P ஃபீல் டூயல் டோன் - ரூ 6,77,500

1.2P ஃபீல் டூயல் டோன் வைப் பேக் - ரூ 6,92,500

1.2P டர்போ ஃபீல் டூயல் டோன் வைப் பேக் - ரூ 8,05,500

Citroen C3 2 பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. முதலாவது 1.2-லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட் 82hp மற்றும் 115Nm மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று 1.2-லிட்டர். 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்(110hp மற்றும் 190Nm) மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் டர்போசார்ஜ்டு எஞ்சின்கள் வழங்குவதாக கூறப்படும் எரிபொருள் திறன் புள்ளிவிவரங்கள் முறையே 19.8 kpl மற்றும் 19.4 kpl ஆகும். அம்சங்களின் அடிப்படையில் Citroen C3 நிறைய வழங்குகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆடியோ அண்ட் ஃபோன் கன்ட்ரோல்ஸ் ஆன் ஸ்டீயரிங் வீல், 4 ஸ்பீக்கர்கள், ஃப்ரன்ட் அன்ட் பேக் USB சார்ஜிங் போர்ட்ஸ் போன்ற பல அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்ஸ், EBD உடன் ABS, ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஹை ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

90% உள்ளூர்மயமாக்கலுடன், இந்த மேட்-இன்-இந்திய மாடல் C-Cubed குடும்பத்தின் முதல் தயாரிப்பாகும். மேலும் இது நம் தமிழகத்தின் திருவள்ளூரில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த காருக்கான புக்கிங்ஸ் ஏற்கனவே ஓபனில் உள்ள நிலையில், நேற்று முதல் (20 ஜூலை) டெலிவரி தொடங்கி உள்ளது. புதிய Citroen C3 இப்போது புதுடெல்லி, குர்கான், மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, சென்னை, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 19 நகரங்களில் உள்ள La Maison Citroen ஷோரூம்கள் விற்கப்படும். அதே நேரம் தொழிற்சாலையிலிருந்து நேரடியாக டோர் டெலிவரி செய்ய ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

First published:

Tags: Automobile, Car