Home /News /automobile /

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டணச் சலுகை குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டணச் சலுகை குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை தொடராது

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை தொடராது

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை தொடருவதற்கான வாய்ப்பு இல்லை

    ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதைத் தொடருவதற்கான வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவதால் ரயில்வே துறைக்கு மிகக் கூடுதலான செலவினம் ஏற்படுகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    முன்னதாக, கொரோனா காலகட்டத்தில் முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அவரது பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

    ஏற்கனவே மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கான பயணக் கட்டணத்தில் சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலான செலவினத்தை ரயில்வே துறை சுமந்து வருகிறது. பயணிகளுக்குக் குறைவான கட்டணத்தில் பயண சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Also Read : பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    இது மட்டுமல்லாமல், கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, 2019 - 20 காலகட்டத்தை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் பயணிகள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் என்பது குறைவாக இருக்கிறது. ரயில்வே துறையின் நிதி சார்ந்த நலனில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டால் அது ரயில்வே துறையைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே, மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பு பயணிகளுக்குக் கட்டணச் சலுகையை நீட்டிப்பது இயலாத காரியமாகும்.

    ரயில்


    கட்டணச் சலுகை தொடர்கிறது  அதே சமயம், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 4 விதமான பிரிவுகளில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும், 11 பிரிவுகளில் நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கும் கட்டணச் சலுகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 - 20 நிதியாண்டில் .18 கோடி, 2020 - 21 நிதியாண்டில் 1.90 கோடி, 2021 - 22 நிதியாண்டில் 5.5 கோடி என்ற எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் பயணம் செய்திருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக 2020 - 21 நிதியாண்டிலும், 2021 - 22 நிதியாண்டிலும் மூத்த குடிமக்களின் பயணங்கள் குறைந்திருக்கின்றன.

    முன்னதாக, 2019 - 20 நிதியாண்டில் 22.62 லட்சம் மூத்த குடிமக்கள் தங்கள் பயணக் கட்டண சலுகையைத் தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்தனர். ரயில்வே வசதிகளைச் சிறப்பானதாகவும், நிலையானதாகவும் மேம்படுத்தும் நோக்கில் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    கடந்த 2017 - 18, 2018 - 19, 2019 - 20 நிதியாண்டுகளில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பிரிவுகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை வழங்கிய விதத்தில் ரயில்வே துறைக்கு ரூ.4,794 கோடி இழப்பு ஏற்பட்டது’’ என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Central government, Indian Railways, Parliament

    அடுத்த செய்தி