இந்திய கார் சந்தையில் நுழைந்த டெஸ்லா - மும்பையில் முதல் ஷோரூம்!

இந்திய கார் சந்தையில் நுழைந்த டெஸ்லா - மும்பையில் முதல் ஷோரூம்!

டெஸ்லா

டெஸ்லா, இந்தியாவின் தொழில்நகரமான மும்பையில் முதல் ஷோரூமை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மின்சார கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லா, இந்தியாவின் தொழில்நகரமான மும்பையில் முதல் ஷோரூமை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனம் உலகளவில் மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கார் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ள அந்த நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க ஆர்வம் காட்டியது. அதற்காக பூர்வாங்கப் பணிகளை தொடங்கிய டெஸ்லா, பெங்களூருவில் தலைமையகத்தை அமைப்பதாக அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார். உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று கர்நாடகாவில் கால்பதிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

பெங்களுரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் கார்ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை அந்நிறுவனம் திறக்க உள்ளது. பெங்களுருவில் தலைமையகத்தை அமைத்தாலும் முதல் ஷோரூம்-ஐ டெஸ்லா எங்கு அமைக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு கார் தயாரிப்பு சந்தையில் நிலவி வந்தது. இந்நிலையில், முதல் கார் தயாரிப்பு ஷோரூம் மற்றும் ஆபிஸை மும்பை பிஸ்னஸ் நகரமான பரேல் -வோர்லி பகுதியில் டெஸ்லா நிறுவனம் தொடங்க உள்ளது. இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய கார் சந்தைக்குள் நுழையும் டெஸ்லாவின் இந்திய தலைமை பொறுப்புகளுக்கு அண்மையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். கார் தயாரிப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்து பிரிவுகளுக்கும் தலைச்சிறந்த நிபுணர்களை அந்த நிறுவனம் தேர்தெடுத்துள்ளது. டெஸ்லா இந்தியாவின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பிரிவு தலைவராக மனோஜ் குரானா நியமிக்கப்பட்டுள்ளார். சார்ஜிங் மேனேஜராக நிஷாந்த் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் முன்னதாக Ather Energy நிறுவனத்தில் எலக்டிரிக் கார்களின் சார்ஜிங் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பிரிவின் தலைவராக இருந்தார்.

Also read... மயூர் ஷெல்கேவுக்கு புல்லட் பரிசு - ஜாவா நிறுவனம் அசத்தல்!

வால்மார்ட் மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனங்களில் ஹெச்.ஆர் பிரிவில் பணியாற்றிய சித்ரா தாம்ஸ் என்பவர் டெஸ்லாவின் இந்தியாவின் ஹெச்.ஆர் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். டெஸ்லா இந்திய கார் சந்தையில் மிக வேகமாக கால்பதிக்க காரணம், இந்திய அரசு மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட உள்ள தொழில்நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா, முதன்முதலான செடான் 3 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பை, பெங்களுரு, டெல்லி நகரங்கள் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதிகள் என்பதால், அவர்களை குறிவைத்து கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் எலக்டிரிக் கார் பயன்பாடு மிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. டெஸ்லாவின் வருகைக்குப் பின்னர் வேகமெடுக்குமா? என என எதிர்பார்ப்பு நிலவுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: