Home /News /automobile /

சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 1.28 லட்சம் கார்களை திரும்ப பெற்ற டெஸ்லா..காரணம் என்ன?

சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 1.28 லட்சம் கார்களை திரும்ப பெற்ற டெஸ்லா..காரணம் என்ன?

காட்சி படம்

காட்சி படம்

Tesla : சீன வாடிக்கையாளர்களிடமிருந்து சில புகார்களை எதிர்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையை டெஸ்லா மேற்கொண்டுள்ளது.

சீனாவில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 1,28,000 கார்களை, அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா திரும்ப பெற்றுள்ளது.

வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்க கூடிய தவறு இருப்பதன் காரணமாக ஒன்னேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை டெஸ்லா திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன வாடிக்கையாளர்களிடமிருந்து சில புகார்களை எதிர்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையை டெஸ்லா மேற்கொண்டுள்ளது.

சீனாவின் வாகன கட்டுபாட்டாளர்களின் சமீபத்திய ஆய்வில் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 கார்களில் ரியர் மோட்டார் இன்வெர்ட்டரில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே டெஸ்லா நிறுவனம் சுமார் 1,27,785 கார்களை திரும்ப பெற்றுள்ளது.

கார் ஓட்டும் போது ரியர் மோட்டார் இன்வெர்ட்டர் குறைபாடு ஏற்பட்டால் வாகனம் ஓட்டுபவர் தனது டிரைவிங் கண்ட்ரோலை இழக்க நேரிடும். இதனை மோதல் அல்லது விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று சீன சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் கூறி இருக்கிறது. செமிகண்டக்டர் காம்போனென்ட்ஸில் உள்ள பிழைகள் காரணமாக இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

also read : மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட XL6 கார்களின் அறிமுகம் எப்போது?



நியோ மற்றும் எக்ஸ்பெங் போன்ற உள்நாட்டு பிராண்டுகளின் கடுமையான போட்டி இருந்த போதும் கூட கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் சுமார் 70,847 கார்களை விற்று சாதனை படைத்தது டெஸ்லா நிறுவனம். ஆனால் தரம் மற்றும் சேவை சிக்கல்கள் குறித்து பல சீன யூஸர்கள் சோஷியல் மீடியாக்களில் எழுப்பிய புகார்கள் காரணமாக டெஸ்லா நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டது.

also read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

இதனிடையே மீண்டும் அதிகரித்துள்ள தொற்று பரவல் காரணமாக சீன நகரமான ஷாங்காயில் உள்ள டெஸ்லாவின் “ஜிகாஃபாக்டரி” சில நாட்களாக மூடப்பட்டு உள்ளது. அந்நகரத்தில் உள்ள சுமார் 25 மில்லியன் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். குறைபாடுகள் காரணமாக டெஸ்லா சீனாவிலிருந்து கார்களை திரும்ப பெறும் சம்பவம் என்பது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 2,00,000 வாகனங்களை ட்ரங்க் குறைபாடு (trunk defect) காரணமாக திரும்ப பெற்றது டெஸ்லா.



வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான கார்கள் க்ளீன் எனர்ஜியுடன் இயங்குவதை நோக்கமாக கொண்டு, மானியங்கள் மூலம் மின்சாரம் மற்றும் ஹைபிரிட் வாகன விற்பனையை சீனா பெரிதும் ஊக்குவித்து வருகிறது. எனவே டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக சீனா மாறும் என்று கணித்தார். சீன வாடிக்கையாளர்களிடம் தனது நிறுவனத்தை நிலைநாட்ட டெஸ்லா தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் எலான் மஸ்க் கூறி இருக்கிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric car

அடுத்த செய்தி