• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • "செல்ப் டிரைவிங் சிஸ்டம்" தயாரிப்பிற்காக சாம்சங்குடன் கைகோர்த்த டெஸ்லா நிறுவனம்!

"செல்ப் டிரைவிங் சிஸ்டம்" தயாரிப்பிற்காக சாம்சங்குடன் கைகோர்த்த டெஸ்லா நிறுவனம்!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா தனது முழு செல்ப் டிரைவிங் சிப்பை 2019ல் வெளியிட்டது. இந்த சிப் சாம்சங் 14nm தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.

  • Share this:
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லாதான் நம்பர் ஒன். அந்நிறுவனம் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது கார் தயாரிப்புக்காக தொழிற்சாலையை அமைத்துள்ளது. டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால், அதன் முதல் கார் ‘டெஸ்லா மாடல் 3’ ஆகத்தான் இருக்கும் என்றும், புக்கிங்குகள் ஆரம்பித்து விட்டன என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்திருந்தது டெஸ்லா. இந்த நிலையில் ‘இந்தப் புத்தாண்டுக்கு (2021) பிறகு டெஸ்லா இந்தியாவுக்கு உறுதியாக வரும்’ என்று டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க்கே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் டெஸ்லா சாம்சங்குடன் இணைந்து அதன் வரவிருக்கும் புதிய 5nm ப்ராசெஸ்ஸாருடன் செயல்படும் "செல்ப் டிரைவிங் சிஸ்டம் சிப்" ஒன்றை வடிவமைக்க உள்ளது. சாம்சங் தனது கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அதன் சொந்த எக்ஸினோஸ் 2100 செயலியை இதற்காக பயன்படுத்துகிறது. ஆனால் முன்னர் டெஸ்லா டிஎஸ்எம்சி தயாரிக்கும் 7 என்எம் ப்ராசெஸ்ஸாரை (7nm processor) பயன்படுத்தும் என்று கூறப்பட்டிருந்தது.

சாம்சங் இத்தகைய ப்ராசெஸ்ஸார்களை உற்பத்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனம் என்பதால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் இந்த ஒப்பந்தத்தை சாம்சங் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஃபவுண்டரி பிரிவு தற்போது என்எம் ப்ராசெஸ்ஸார் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது என தென் கொரிய செய்தி நிறுவனமான ஆசியா-இ தகவல் அளித்துள்ளது.

டெஸ்லா


தீவிர புற ஊதா (ஈ.யூ.வி) செயல்முறையில் பயன்படுத்தப்படும் 5nm ப்ராசெஸ்ஸார் ஒரு உயர் தொழில்நுட்ப தயாரிப்புக்கு உதவுகிறது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இதனை தயாரிக்கும் திறன் பெற்றவையாக உள்ள நிலையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டி.எஸ்.எம்.சி ஆகியவை இவற்றை தயாரிக்கும் அனுபவம் பெற்றவை. எனவே டெஸ்லா இந்த ஒப்பந்தத்தை சாம்சங் நிறுவனத்திற்கு வழங்கியது ஒரு சிறந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சாம்சங்கின் 5 என்எம் தொழில்நுட்பம் டிஎஸ்எம்சியின் 5 என்எம் தொழில்நுட்பத்தைப் போல திறமையாக இல்லை என்று கருதப்பட்டாலும், 7 என்எம் தொழிநுட்பத்தை விட சிறந்ததாகவே இருக்கிறது. டெஸ்லா தனது முழு செல்ப் டிரைவிங் சிப்பை 2019ல் வெளியிட்டது. இந்த சிப் சாம்சங் 14nm தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதையை புதிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, எதிர்கால பதிப்புகள் 5nm தொழிநுட்பத்தில் தான் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 5nm 2021ன் டாப் எண்ட் கேஜெட்களில் பயன்படுத்தப்படுகின்றன குறிப்பாக ஆப்பிளின் ஐபோன் 12 உள்ளிட்ட சமீபத்திய ஸ்மார்ட்போன்களிலும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: