ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் அறிமுகமாகிறதா டெஸ்லா...? சிக்கிய டெஸ்ட் ட்ரைவ் காட்சி!

இந்தியாவில் அறிமுகமாகிறதா டெஸ்லா...? சிக்கிய டெஸ்ட் ட்ரைவ் காட்சி!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா உடன் அசோக் லேலாண்ட் நிறுவனம் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் டெஸ்லாவின் கால் பதியாதா? என மோட்டார் விரும்பிகள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் டெஸ்லா மாடல்X SUV இந்தியாவில் காணப்பட்டுள்ளது.

டெஸ்லா மாடல்X SUV கார் ஒன்று மும்பை சாலைகளில் டெஸ்ட் ட்ரைவ் செய்யப்படும் காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் அலாய் சக்கரங்களுடன் பாந்த்ரா நகர சாலைகளில் ஊர்வலம் வந்துள்ளது டெஸ்லா மாடல்X SUV. இதனால் இந்தியாவில் டெஸ்லா அறிமுகமாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அசோக் லேலாண்ட் அளித்துள்ள விளக்க உரையில் டெஸ்லா உடன் அசோக் லேலாண்ட் நிறுவனம் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் டெஸ்லாவை களமிறக்க அசோக் லேலாண்ட் உதவும் என்ற செய்தி உலவுகிறது.

(Image Courtesy: Source)

இந்தியாவில் தென்பட்ட இரண்டாவது டெஸ்லா எலெக்ட்ரிக் கார் இதுதான். இந்தியாவின் முதல் டெஸ்லா காரை எஸ்ஸார் நிறுவன சிஇஒ பிரஷாந்த் ரியா வைத்துள்ளார்.

மேலும் பார்க்க: ஒரு ’காம்பேக்ட் எஸ்யூவி’ தேடுகிறீர்களா? ஹூண்டாய் வென்யூ நல்ல ஆப்ஷன்!

Published by:Rahini M
First published: