• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பெங்களூவில் அலுவலகம் அமைத்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியது டெஸ்லா நிறுவனம்!

பெங்களூவில் அலுவலகம் அமைத்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியது டெஸ்லா நிறுவனம்!

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் தனது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக அம்மாநில அரசுகளுடன் டெஸ்லா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
எலக்ட்ரிக் கார்களில் உலகின் முன்னோடியாக இருப்பவை டெஸ்லா கார்கள். உலகின் பல நாடுகளிலும் சிறந்து விளங்கும் டெஸ்லா கார்கள், எலக்ட்ரிக் கார்களிலேயே மதிப்புமிக்க பிராண்டாக விளங்கி வருகிறது. உலகின் பல நாடுகளிலும் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு கிடைத்து வந்தாலும் இந்தியாவில் பல காரணங்களுக்காக டெஸ்லாவை அறிமுகப்படுத்தாமலே இருந்து வந்தனர்.

ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்து வருவது டெஸ்லா கார்களின் இந்திய அறிமுகமே. இந்நிலையில் இந்த ஆண்டில் டெஸ்லா இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தது.

அதன்படி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 2021ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் டெஸ்லா கால்பதிக்கும் என கூறியிருந்தார். அதே போல மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தனது ட்விட்டரில் டெஸ்லா இந்தியாவில் களமிறங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறது டெஸ்லா நிறுவனம்.

கம்பெனி ரிஜிஸ்திராரிடம் Tesla India Motors and Energy Private Ltd என்ற பெயரில் தனது இந்திய நிறுவனத்தை பதிவு செய்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா.

கடந்த ஜனவரி 8ம் தேதியன்று தனது நிறுவனத்தை பதிவு செய்துள்ளதுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது அலுவலத்தையும் அமைக்க உள்ளது. மேலும் 3 இயக்குனர்களையும் அந்நிறுவனம் நியமித்துள்ளது.

மேலும் படிக்க... ரசம் சாப்பிடுங்க கொரோனா போயிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் தனது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக இம்மாநில அரசுகளுடன் டெஸ்லா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே டெஸ்லாவை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, “கிரீன் மொபிலிட்டியை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். பெங்களூருவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கிளையுடன் இந்தியாவில் விரைவாகவே டெஸ்லா தனது இயக்கத்தை தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்கும், கர்நாடகத்திற்கு எலான் மஸ்கை நான் வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உலகின் நம்பர்-1 இடத்துக்கு டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்க்
முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: