Home /News /automobile /

இந்தியாவில் மேலும் மூன்று EV மாடல்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் பெற்ற Tesla!

இந்தியாவில் மேலும் மூன்று EV மாடல்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் பெற்ற Tesla!

கார்

கார்

கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்லா நிறுவனம் அதன் 4 கார் மாடல்களுக்கு ஹோமோலோகேஷன் சான்றிதழ்களை பெற்றது.

எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான உலகின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் வெஹிகிள் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம், அதன் மின்சார வாகனங்களின் மேலும் மூன்று டிரிம்களுக்கு இந்தியாவில் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவின் வாகன சோதனை மற்றும் சான்றிதழ் நிறுவனங்களிடமிருந்து மேலும் மூன்று மாடல்களுக்கான ஒப்புதலை பெற்றுள்ளதை தொடர்ந்து, டெஸ்லா மொத்தம் நாட்டில் 7 வெர்ஷ்ன்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெஸ்லா இந்தியாவில் தனது மேன்பவரை பலப்படுத்தி வருகிறது. பல அனுபவமிக்க பணியாளர்களை உயர் பதவிகளில் நியமித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய பிரசாந்த் மேனன், தற்போது இந்தியாவில் டெஸ்லாவின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன் சேவா (Vahan Sewa) பகிர்ந்துள்ள தகவலின் படி, Tesla Inc-ன் இந்தியாவின் துணை நிறுவனமான Tesla India Motors and Energy மேலும் மூன்று மாடல்களுக்கான ஹோமோலோகேஷன் சான்றிதழை (homologation certificate) பெற்றுள்ளது, இதன் மூலம் மொத்தம் ஏழு Tesla மாடல்களுக்கு இதுவரை அனுமதி கிடைத்துள்ளது.

ALSO READ |  பாதுகாப்பான கார்களை வாங்க அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!

கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்லா நிறுவனம் அதன் 4 கார் மாடல்களுக்கு ஹோமோலோகேஷன் சான்றிதழ்களை பெற்றது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 3 மாடல்களுக்கு சமீபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஒப்புதலை பெற்ற துல்லியமான டெஸ்லா மாடல்கள் பற்றி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்திய சாலைகளில் Model 3s மற்றும் ModelYs ஆகியவை காணப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

ஒரு சில டெஸ்லா டெஸ்ட் யூனிட்ஸ் இந்தியாவில் உள்ள உள்ளூர் சாலைகள் வழியாக தொடர்ந்து சென்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட EV தயாரிப்பாளரான டெஸ்லா உள்ளூர் உற்பத்தியை நோக்கி இன்னும் தீவிரமான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. துவக்கத்தில் டெஸ்லா தனது EV-க்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

ALSO READ |  ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்...

எனவே டெஸ்லா இந்தியாவிற்கு அனுப்பும் வாகனங்களின் இறக்குமதி வரியை குறைந்தபட்சம் 40% குறைக்க இந்திய அரசிடம் கோரியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் டெஸ்லா போன்ற ஒரு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகளை அளிக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் போதுமான தேவை ஏற்படும் பட்சத்தில் டெஸ்லா நிறுவனம் உள்ளூர் உற்பத்திக்கான சாத்தியத்தை மதிப்பீடு செய்யலாம் என தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேசி இருந்த எலான் மஸ்க் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுடன் டெஸ்லா வெற்றி பெற வேண்டுமானால், இந்தியாவில் ஒரு டெஸ்லா தொழிற்சாலை சாத்தியமாகலாம் என் கூறி இருந்தார்.

ஹோமோலோகேஷன் சான்றிதழ் (Homologation certificate) என்றால் என்ன.?

ஹோமோலோகேஷன் என்பது ஒரு குறிப்பிட்ட வாகனம் அனைத்து குறிப்பிட்ட அளவுகோல்களையும் பூர்த்தி செய்த பிறகு சாலையில் இயங்க தகுதியானது என்பதை சான்றளிக்கும் ஒரு செயல்முறையாகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Car

அடுத்த செய்தி