Home /News /automobile /

2021ல் உலகளவில் 1 மில்லியன் கார்களை டெலிவரி செய்து டெஸ்லா சாதனை!

2021ல் உலகளவில் 1 மில்லியன் கார்களை டெலிவரி செய்து டெஸ்லா சாதனை!

டெஸ்லா கார்

டெஸ்லா கார்

டெஸ்லா நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், 2021-ல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்களை விநியோகித்து இருக்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்ச்சியான உலகளாவிய கோவிட் தொற்று மற்றும் விநியோகப் பிரச்னைகள் (supply chain issues) உள்ளிட்ட பல இருந்த போதிலும் எலோன் மஸ்க்-கின் EV நிறுவனமான டெஸ்லா கடந்த ஆண்டு (2021) கிட்டத்தட்ட 1 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாடிகையாளர்களுக்கு விநியோகித்து உள்ளது. கடந்த ஆண்டு அதாவது 2021-ல் டெஸ்லா நிறுவனம் உலகளவில் சுமார் 9,36,172 வாகனங்களை வழங்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு அதாவது கடந்த 2020-ல் டெஸ்லா நிறுவனம் செய்த சுமார் 4,99,550 வாகன விநியோகங்களை விட 87 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக டெஸ்லா நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், 2021-ல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்களை விநியோகித்து இருக்கிறோம். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும், உலகளாவிய விநியோக சவால்கள் இருந்த போதிலும் எதிர்பார்த்ததை விட முடிவுகள் சிறப்பாக இருந்தன என்று கூறப்பட்டு உள்ளது. டெஸ்லா நிறுவனம் கடந்த ஜனவரியில் தனது எலெக்ட்ரிக் வாகன டெலிவரிகளை வருடத்திற்கு 50 சதவிகிதம் அதிகரிப்பதை இலக்காக கொண்டிருப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் சமீபத்திய டெஸ்லாவின் அறிக்கை 50 சதவீதம் என்ற அந்த இலக்கை விட அதிகமாக இருப்பதாய் சுட்டி காட்டி இருக்கிறது.

சமீபத்தில் தனது தலைமையகத்தை கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவிலிருந்து (Palo Alto) டெக்சாஸின் ஆஸ்டினுக்கு (Austin) மாற்றியது டெஸ்லா குழுமம். தனது Model 3 எலெக்ட்ரிக் வாகனங்களின் 911,208 யூனிட்கள் மற்றும் Model Y வாகனங்களின் 24,964 யூனிட்களை முறையே $90,000 மற்றும் $100,000 என்ற விலையில் விற்று உள்ளது டெஸ்லா நிறுவனம். உண்மையில் டெஸ்லா நிறுவனம் தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளில் புதிய டெலிவரி சாதனையை படைத்துள்ளது.

ALSO READ |  பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

வாகன தொழிலை பாதித்த உலகளாவிய தளவாட சிக்கல்களை (global logistics issues) சமாளித்த டெஸ்லா, நான்காவது காலாண்டில் மட்டும் சுமார் 3,08,600 கார்களை டெலிவரி செய்து உள்ளது. புதிய சிப் டிசைன்கள் மற்றும் ரீரைட்டிங் சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் மூலம் செமிகண்டக்டர் பற்றாக்குறையை (semiconductor shortage) சமாளிக்க முடிந்ததாக டெஸ்லாவின் எலோன் மஸ்க் பேட்டியில் கூறி இருந்தார்.

ALSO READ |  செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் இறங்கிய Ashok Leyland!

இதனிடையே கடந்த அக்டோபரில் வாடகை நிறுவனமான (rental company) ஹெர்ட்ஸ் (Hertz) நிறுவனத்திடமிருந்து சுமார் 1,00,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆர்டரை பெற்ற டெஸ்லா மேலும் ஊக்கம் பெற்றது. "9,36,000 எலெக்ட்ரிக் வாகனங்களை விநியோகித்து 2021-ஐ ஒரு சிறந்த ஆண்டை அடைய எங்களுக்கு உதவிய எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சப்ளையர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி" என்று டெஸ்லா தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி