Home /News /automobile /

2 நாட்களில் 1.50 லட்சம் பேர் முன்பதிவு... டெஸ்லா சைபர்ட்ரக் வாகனத்துக்குப் பெரும் வரவேற்பு

2 நாட்களில் 1.50 லட்சம் பேர் முன்பதிவு... டெஸ்லா சைபர்ட்ரக் வாகனத்துக்குப் பெரும் வரவேற்பு

இந்த டெஸ்லா சைபர்ட்ரக் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

இந்த டெஸ்லா சைபர்ட்ரக் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

இந்த டெஸ்லா சைபர்ட்ரக் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

  • News18
  • Last Updated :
    அறிமுகமான இரண்டு நாட்களில் டெஸ்லா சைபர்ட்ரக் வாகனத்தை சுமார் 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சைபர்ட்ரக்-க்கு குவியும் வரவேற்பை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சைபர்ட்ரக் அறிமுகப்படுத்தப்பட்ட போது உடையாத கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனால், கண்ணாடி உடையுமா என்ற சோதனையில் மேடையிலேயே கண்ணாடி விழுந்து உடைந்தது சர்வதேச அளவில் வைரலானது. இது ஒரு புறம் இருந்தாலும் டெஸ்லாவுக்கான வாடிக்கையாளர்கள் சைபர்ட்ரக்-க்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

     


    முன்பதிவு செய்துள்ள 1.50 லட்சம் பேரில் 17% பேர் சிங்கிள் மோட்டார் வாகனத்துக்கும் 41% பேர் மூன்று மோட்டார் கொண்ட ரகத்துக்கும் 42% பேர் டூயல் மோட்டார் வாகன ரகமும் வேண்டும் என முன்பதிவு செய்துள்ளனராம். இந்த டெஸ்லா சைபர்ட்ரக் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

    விற்பனை குறித்து டெஸ்லா இன்னும் உறுதியான தேதியை அறிவிக்கவில்லை. ஆனால், 2021-ம் ஆண்டில் நிச்சயம் டெஸ்லா சைபர்ட்ரக் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாம்.

    மேலும் பார்க்க: ’ரெட்ரோ’ தோற்றத்தில் அசத்தும் ராயல் என்ஃபீல்டு ‘தர்மா’..!

     
    Published by:Rahini M
    First published:

    Tags: Tesla CyberTruck

    அடுத்த செய்தி