2020-ல் இந்தியாவுக்கு டெஸ்லா வரலாம் - சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு எலான் மஸ்க் பதில்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சேர்த்து டெஸ்லாவை விற்பனை செய்ய புதிதாக சீனாவில் முதல் வெளிநாட்டுத் தொழிற்சாலையை டெஸ்லா தொடங்கியுள்ளது.

2020-ல் இந்தியாவுக்கு டெஸ்லா வரலாம் - சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு எலான் மஸ்க் பதில்!
டெஸ்லா X
  • News18
  • Last Updated: July 29, 2019, 1:03 PM IST
  • Share this:
சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுடன் நடந்த உரையாடலின்போது டெஸ்லா 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் உற்பத்தியாளர் மற்றும் விண்வெளிப் போக்குவரத்து நிறுவனம் நடத்திய சர்வதேச போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த அவிஷ்கர் ஹைப்பர்லூக் அணியினர் பெற்றனர்.

இறுதிப் போட்டியின் போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் கலந்துரையாடும் வாய்ப்பை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பெற்றனர். அப்போது இந்தியாவுக்கு டெஸ்லா வருகை குறித்து மாணவர்கள் எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினர்.


மஸ்க் பதிலளிக்கையில், ”இன்னும் ஓராண்டு காலத்தில் அது நடக்கும். இந்தியாவில் எனது மிகப்பெரும் அறிமுகத்தைக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகிறேன். இந்த ஆண்டே டெஸ்லாவை இந்தியாவுக்கு எடுத்து வர விரும்புகிறேன். முடியவில்லை என்றால் நிச்சயமாக அடுத்த ஆண்டு வெளியீடு இருக்கும்” என்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் கூட இதுகுறித்த ஒரு சிறு குறிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியாவுக்கு டெஸ்லா வந்தால் அது மாடல் 3 ஆகவே இருக்கும் என்றே கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சேர்த்து டெஸ்லாவை விற்பனை செய்ய புதிதாக சீனாவில் முதல் வெளிநாட்டுத் தொழிற்சாலையை டெஸ்லா தொடங்கியுள்ளது.

மேலும் பார்க்க: அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் 2020-ல் வெளியாகும் புதிய மஹிந்திரா பொலிரோ+
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்