Home /News /automobile /

இது தெரியுமா உங்களுக்கு? இனி ரயில் லேட்டா வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்குமாம்

இது தெரியுமா உங்களுக்கு? இனி ரயில் லேட்டா வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்குமாம்

ரயில்

ரயில்

இந்தியாவின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையுடன் டெல்லியில் இருந்து லக்னோவிற்கு இயக்கப்படும் புகழ்பெற்ற தேஜஸ் ரயில், சமீபத்தில் அமெளசி என்ற பகுதியில் நிறுத்தப்பட்டதால் 3 மணிநேரம் தாமதமானது.

    இந்தியாவின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையுடன் டெல்லியில் இருந்து லக்னோவிற்கு இயக்கப்படும் புகழ்பெற்ற தேஜஸ் ரயில், சமீபத்தில் அமெளசி என்ற பகுதியில் நிறுத்தப்பட்டதால் 3 மணிநேரம் தாமதமானது. இதற்கு மின்கம்பி பழுதடைந்ததே தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது. தேஜாஸ் தவிர, இதேபோன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் மேலும் 47 ரயில்களையும் இந்த சம்பவம் பாதித்தது. மேலும், பின்னர், மின் பாதைகளில் ஏற்பட்ட சிக்கலை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால், தேஜாஸ் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தி இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) விதிகளின்படி, தாமதமாக வரும் அனைத்து ரயில்களும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலான தேஜஸ் ரயிலிலும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதற்காக டெல்லி - லக்னோ இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த இழப்பீடு குறித்த விவரங்கள், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ பயணிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்பட உள்ளது. மின்னஞ்சல் அல்லது SMS இல் அனுப்பப்படும் இணைப்பை (Link) கிளிக் செய்து பயணிகள் தங்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இணைப்பை கிளிக் செய்ததும் ஓபன் ஆகும் பக்கத்தில், PNR எண், கணக்கு விவரங்கள், IFSC நம்பர் மற்றும் பிற தேவையான விவரங்கள் போன்ற தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். நீங்கள் தேவையான விவரங்களை வழங்கிய பிறகு, நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற நீங்கள் தகுதி பெற்றிருந்தால், அந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    Also Read : முன்பதிவு தேவை இல்லை... பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே!

    தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கொள்கையின் படி, ரயில் ஒரு மணி நேரம் தாமதமானால், பயணிகளுக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். தாமதத்திற்கு ஏற்ப தொகை அதிகரிக்கிறது, உதாரணமாக, ரயில் மூன்று மணிநேரம் தாமதமானால், உங்களுக்கு ரூ. 250 இழப்பீடு வழங்கப்படும். மேலும், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ரூ. ரூ. 25 லட்சம் பயணக் காப்பீடும், பயணத்தின் போது திருட்டு அல்லது கொள்ளை நடந்தால் ரூ. 1 லட்சம் இழப்பீடும் வழங்குகிறது. இந்த திட்டம் முதன் முறையாக தேஜஸ் ரயிலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே சர்வதேச தரத்துடன் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டு இயக்கும் ரயில் தேஜாஸ் ஆகும். எக்சிகியூட்டிவ் ஏசி சேர் கார் கோச், 12 ஏசி சேர் கார் கோச், 2 லக்கேஜ் கம் பர்த் கோச் என மொத்தம் 15 பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளைக் கொண்ட தேஜாஸ் ரயில் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-யில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: IRCTC, Train

    அடுத்த செய்தி