Tata Tiago லிமிடெட் எடிஷனாக இந்தியாவில் ரூ. 5.79 லட்சத்திற்கு அறிமுகம்! 

Tata Tiago லிமிடெட் எடிஷனாக இந்தியாவில் ரூ. 5.79 லட்சத்திற்கு அறிமுகம்! 

XT வேரியண்ட்டில் (XT variant,) உருவாக்கப்படும், Tiago லிமிடெட் எடிஷன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் (manual transmission) கிடைக்கிறது.

XT வேரியண்ட்டில் (XT variant,) உருவாக்கப்படும், Tiago லிமிடெட் எடிஷன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் (manual transmission) கிடைக்கிறது.

  • Share this:
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் டியாகோ ஹேட்ச்பேக் காரை லிமிடெட் எடிசனில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு நாளும் இதுகுறித்த புதிய தகவல்கள் வெளியாகி வாகன ஆர்வர்களின் ஆவலை பெருமளவில் தூண்டி வந்தன. இந்நிலையில், ஒட்டுமொத்த ஆவலுக்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று டியாகோ லிமிடெட் எடிசன் காரின் அறிமுகம் அரங்கேறியது. 

டியாகோ ஓர் லிமிடெட் எடிசன் என்பதனால்தான் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.  இந்த காரணத்தினால்தான் இக்கார் புதிய ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் காட்சியளிக்கின்றது. டாடா மோட்டார்ஸின் (Tata Motors) லிமிடெட் எடிஷனான Tiagoவை ரூ .5.79 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளியீடு டியாகோவின் (Tiago) முதல் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

XT வேரியண்ட்டில் (XT variant,) உருவாக்கப்படும், Tiago லிமிடெட் எடிஷன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் (manual transmission) கிடைக்கிறது. மேலும் இந்த வாகனம் மூன்று ஒற்றை- டோன் கலர்களுடன் (Three single-tone colours) ஃபிளேம் ரெட், பியர்லசென்ட் வைட் & டேடோனா கிரே (Flame Red, Pearlescent White & Daytona Grey) விற்பனைக்கு வருகின்றது. 

மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக இதில், புதிய 14 அங்குல போல்ட் பிளாக் அலாய் வீல்ஸ், ஹர்மனின் 5 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், நவிமாப்கள் மூலம் 3D நாவிகேஷனை சப்போர்ட் செய்கிறது (14-inch Bold Black Alloy Wheels, 5-inch Touchscreen Infotainment by Harman that supports 3D Navigation through Navimaps), டிஸ்ப்ளேவுடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், குரல் கட்டளை அங்கீகாரம், படம், வீடியோ பிளேபேக் மற்றும் பின்புற பார்சல் ஷெல்ஃப் (Reverse Parking Sensor with Display, Voice Command Recognition, Image & Video Playback and Rear Parcel Shelf) ஆகியவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளதுதான் அல்டிமேட். 

 இந்த புதிய வேரியண்டின் அறிமுகம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், பயணிகள் வாகன வர்த்தக பிரிவின் தலைவர் (Head - Marketing, Passenger Vehicles Business Unit, Tata Motors) திரு. விவேக் ஸ்ரீவத்ஸா (Mr. Vivek Srivatsa) கூறுகையில், “2016 ஆம் ஆண்டில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, டியாகோ அதன் பிரிவில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது மேலும் அனைவராலும் பாராட்டப்பட்டது.  இதைத் தொடர்ந்து, தயாரிப்பின் BS VI பதிப்பு 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது GNCAP அறிமுகப்படுத்திய 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3.25 லட்சத்துக்கும் அதிகமான மகிழ்ச்சியான கஸ்டமர்களுடன், Tiago மிகப்பெரிய சந்தையைப் பெற்றுள்ளது. லிமிடெட் காலத்தில் இந்த  வேரியண்ட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம், கஸ்டமர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் அதே வேளையில் அவர்களுக்கு Tiago போன்ற தரமான தயாரிப்புகளுடன் தொடர்ந்து உற்சாகத்தைத் தருவோம் என்று நம்புவதாக” அவர் மேலும் கூறினார். 

இந்த அதிக வரவேற்பைப் பெற்று காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அட்டகாசமான சிறப்பம்சங்கள், கண்களைப் பறிக்கும் கவர்ச்சியான தோற்றம் ஆகியவற்றை இக்கார் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தற்போதும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது.
Published by:Ram Sankar
First published: