ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் குறைந்த விலையில் Tata Tiago எலக்ட்ரிக் கார் அறிமுகம் - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

இந்தியாவில் குறைந்த விலையில் Tata Tiago எலக்ட்ரிக் கார் அறிமுகம் - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

டாடா டிகோ

டாடா டிகோ

Tata Tiago EV | இந்தியாவில் பல்வேறு அம்சங்களுடன் குறைந்த விலையில் டாடா நிறுவனம் தயாரித்த (Tata tiago EV) டாடா டியோகா எலக்ட்ரிக் கார் இன்று முதல் அறிமுகமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனமான டாடா, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாகனங்களைத் தயாரித்து நம்பர் 1 நிறுவனமாக இயங்கிவருகிறது. மக்களிடம் எலக்ட்ரிக் கார் மீதான ஆர்வம் அதிகரித்துவரும் சூழலில் டாடா நிறுவனம் நெக்சோன் மற்றும டிகோர் கார்களில் எலக்ட்ரிக் வெர்ஷனை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் என்ட்ரி லெவல் காரான டியோகா காரில் புதிய எலக்ட்ரின் வேரியன்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஹேச்பேக் மாடலில் முதல் முறையாக வழங்கப்படும் அம்சங்கள் டியோகாவில் வழங்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக செப்டம்பர் 28 முதல் டியோகா எலக்ட்ரிக் கார் அறிமுகமாகியுள்ளது. மிகக் குறைந்த விலையில், பல்வேறு அம்சங்களுடன் இன்று முதல் அறிமுகமாகியுள்ள காரில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? விலை நிலவரம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

டாடா Tiago EV காரில் முக்கிய அம்சங்கள்:

எலக்ட்ரிக் கார்களின் மோகம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றால் போல் தான் டாடா நிறுவனமும் டியோகாரில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக Tata tiago Ev காரில், ஏற்கனவே டிகோர் எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் அதே ziptron technology பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ziptron டெக்னாலஜி அதன் xpes T technology யை விட மேம்பட்ட டெக்னாலஜியாகும்.

இக்காரில் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ப்ளு அக்ஸெண்ட் உள்ளதால், signature teal blue மற்றும் Daytona gray ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியர் லிவர்க்கு பதிலாக ரோட்டரி நாப் மாற்றப்படவுள்ளதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்டீரியர் வசதிகள் போன்ற அனைத்தும் மற்ற டாடா நிறுவன கார்களைப் போன்று ஒரே மாதிரியாக உள்ளது.

Also Read : ரூ.10.45 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டாடா டியோகா காரில் 25kW ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரத்தில் பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடலாம் எனவும் டாடா டியோகா எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர் என்ற அளவில் உள்ளது. மேலும் Tata Tiago EV ஆனது Apple Ca rPlay, Android Auto மற்றும் பிற இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பங்களுடன் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டிருக்கும்.

Also Read : இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா? 

டாடா டியோகா காரின் விலை:

டாடா டியாகோ EVக்கான விலைகள் எக்ஸ்-ஷோரூம் ரூ.9 லட்சத்தில் தொடங்கும் எனவும் டாப்-ஸ்பெக் டிரிம் ரூ.12 முதல் 13 லட்சம் வரை இருக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற கார்களை விட மிகக்குறைந்த விலையில் டாடா டியோகா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதால் வாடிக்கையாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Tata motors