ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் புக்கிங் இன்று முதல் தொடக்கம் - விலை, டெலிவரி விவரங்கள் இதோ.!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் புக்கிங் இன்று முதல் தொடக்கம் - விலை, டெலிவரி விவரங்கள் இதோ.!

டாடா டியாகோ EV

டாடா டியாகோ EV

Tata Tiago EV | மின்சார கார்கள் தயாரிப்பைப் பொறுத்தவரை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி முதல் இடத்திலும், ஹூண்டாய் இரண்டாவது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இருப்பினும், மின்சார கார்கள் தயாரிப்பைப் பொறுத்தவரை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகமான எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

சமீபத்தில் இந்திய வாகன சந்தையில் டாடா நிறுவனம் ‘டாடா டியாகோ இவி’ என்ற மின்சார காரை அறிமுகம் செய்தது. XE, XT, XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் ஆகிய 4 வெரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பேஸ் வெரியண்ட் முழு-எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் ரூ. 8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), டாப் எண்ட் வெரியண்ட் விலை ரூ. 11.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும் அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு, டெலிவரி எப்போது?

டாடா டியாகோ EV-க்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி, டாடா டியாகோ முன்பதிவு செய்யலாம். மேலும் இம்மாதம் முக்கிய நகரங்களில் உள்ள முன்னணி மால்களில் டாடா டியாகோ EV காட்சிப்படுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ்களை பொறுத்தவரை, டிசம்பர் இறுதிக்குள் தொடங்கும் என தெரிகிறது. எனவே இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் மாதத்தில் சோதனை செய்யலாம். 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்பதிவு செய்தவர்களுக்கான விற்பனை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் வண்ணம், நேரம், தேதி மற்றும் மாறுபாடுகளை அடிப்படையாக கொண்டு டெலிவரி தேதியானது மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அள்ளி வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

பேட்டரி செயல் திறன்:

டாடா டியாகோ EV-யில் லித்தியம்-அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 ரேட்டட் பேட்டரி பேக்குகளுடன் 19.2kWh மற்றும் 24kWh ஆகிய இரண்டு வகைகளை கொண்டுள்ளது. 19.2kWh பேட்டரி முழு சார்ஜில் 250 கிலோ மீட்டர் தூரமும், அதே நேரத்தில் 24kWh பேட்டரி பேக்கப் 315 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. 5.7 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Ziptron தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவிங் மோடுகளையும் 4 ரீஜென் மோடுகளையும் கொண்டுள்ளது.

டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் சேவை வியூகத்தின் தலைவரான விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில், “டாடா டியாகோ EV புதுமையான எலக்ட்ரிக் ட்ரெண்ட்செட்டர் ஆகும், இது பிரிமியம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தடம், உற்சாகமான செயல்திறன் மற்றும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ற கூடுதலான நன்மைகளுடன் மலிவு விலையில் கிடைக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read : புதிய மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா.. இந்த காருக்கு இவ்ளோ மவுசா.!-அப்படி என்ன இருக்கு..!

சார்ஜிங் வேகம்:

டாடா டியாகோ EV-யை சார்ஜ் செய்யும்போது, ​​25 kW வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 65 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். அதே நேரத்தில் பிளக் பாயின்ட் மூலம் 15A, 3.3kW AC மற்றும் 7.2kWh AC ஆகியவற்றை சார்ஜ் செய்யலாம். DC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பொறுத்தவரை, இது வெறும் 30 நிமிடங்களில் 110 கிமீ range சேர்க்கும் அதே வேளையில் 157 நிமிடங்களிலேயே 10-80 சதவிகிதம் சார்ஜிங் செய்துவிடலாம்.

சிறப்பம்சங்கள்:

டாடா டியாகோ எலக்ட்ரிக் காரில் லெதரெட் இருக்கைகள், கான்ட்ராஸ்ட் ரூஃப், முழு ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு, புரொஜெக்டர் ஆட்டோ ஹெட் லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்கள் ஏராளமாக உள்ளன. குளோபல் என்சிஏபியின் (Global NCAP) 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட இந்த கார், டீல் ப்ளூ, டேடோனா கிரே, பிரிஸ்டின் ஒயிட், மிட்நைட் பிளம் மற்றும் ட்ராபிகல் மிஸ்ட் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளையும் கொண்டுள்ளது. Apple CarPlay மற்றும் Android Auto போன்றவற்றையும் ஆதரிக்கக்கூடியதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு செய்தியாக 80 புதிய நகரங்களில் நுழைகிறோம், மேலும் 165க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது புதிய நெட்வோர்க்கை விரிவுபடுத்தியுள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric car, Tata motors