ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எலக்ட்ரிக் டிரக்குகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் ரோல்கள் - டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வாகனங்கள்

எலக்ட்ரிக் டிரக்குகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் ரோல்கள் - டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வாகனங்கள்

எலக்ட்ரிக் டிரக்

எலக்ட்ரிக் டிரக்

டாடா ஸ்டீல் நிறுவனம், இது வரை ஒவ்வொன்றும் 35 டன் கொள்ளளவு (குறைந்தபட்ச திறன்) கொண்ட 27 எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

டாடா ஸ்டீல் நிறுவனம், தங்கள் ஸ்டீல் போக்குவரத்துக்காக எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த கூட்டுறவு, ஸ்டீல் உற்பத்தியாளர்கள், தங்கள் முடிக்கப்பட்ட ஸ்டீல் தயாரிப்புகளின் போக்குவரத்துக்காக, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது இதுவே முதல் முறை.

டாடா ஸ்டீல் நிறுவனம், இது வரை ஒவ்வொன்றும் 35 டன் கொள்ளளவு (குறைந்தபட்ச திறன்) கொண்ட 27 எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜாம்ஷெட்பூர் ஆலையில் இருந்து 15 வாகனங்களையும், சாஹிபாபாத் ஆலையில் இருந்து 12 வாகனங்களையும் பயன்படுத்தத்தயாரக உள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்துக்காக, முதல் செட் எலக்ட்ரானிக் வாகனங்கள், டாடா ஸ்டீல் பி.எஸ்.எஸ். சாஹிபாபாத் ஆலை மற்றும் உத்தரபிரதேசத்தில் இருக்கும் பில்குவா ஸ்டாக்யார்ட் ஆலைகளில் செயல்பாட்டில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாடா ஸ்டீல், சப்ளை செயின் துறையின் துணைத் தலைவரான டிப்யேண்டு போஸ், “ஜேஆர்டி டாடாவின் 117 வது பிறந்தநாளில், ஸ்டீல் தயாரிப்புகளை கொண்டு செல்வதற்காக எலக்ட்ரானிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய முயற்சி, GHG உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நம்முடைய சுற்றுசூழலை நீண்ட காலத்துக்கு பாதுகாக்கவும் இது உதவியாக இருக்கும். எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் தான் எலக்ட்ரானிக் வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட எங்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் அளித்தார்.

இந்த முயற்சியை சாத்தியமாக்கிய எங்கள் குழுவின் அர்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. டாடா ஸ்டீல் மற்றும் சப்ளை செயின் துறையின் புதிய சகாப்தத்தின் தொடக்கம் இது” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். நிறுவனத்தின், சப்ளை செயின் துணைத்தலைவரான பியுஷ் குப்தா, “பல ஆண்டுகளாக, வழக்கமான முறைகளை பின்பற்றாமல், புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் டாடா நிறுவனம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர் சேவை முக்கியமாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை கையாண்டிருக்கும் நேரத்தில், சுற்றுசூழல் பாதுகாப்பிலும் இந்த முயற்சி உறுதிப்பாட்டை அளிக்கிறது.

Also read... குறுகிய தொலைவு விநியோகத்துக்கு டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் - யூலு நிறுவனம் அறிவிப்பு!

மேலும், இந்த முயற்சி, அரசாங்கத்தின் பருவ நிலை திட்டத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது. எங்களின் இந்த செயல்பாடுகள், ஒரு முன்னுதாரணமாகவும், தொழில்துறையில் முன்னோடியாகவும் விளங்கும்” என்று கூறினார். இந்த எலக்ட்ரானிக் வாகனங்கள், 2.2 டன், 230.4 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் உடன் அதிநவீன, நேர்த்தியான கூலிங் சிஸ்டம் மற்றும் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த அமைப்பு, 60 டிகிரி செல்சியஸ் வரை சுற்றுப்புற வெப்பநிலையில் செயல்படும் திறனை அளிக்கிறது.

பேட்டரி பேக், 160-kWh சார்ஜர் அமைப்பால் இயக்கப்படுகிறது. 0 சதவிகிதம் இருக்கும் பேட்டரியை 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஜீரோ டைல்-பைப் உமிழ்வுடன், ஒவ்வொரு எலக்ட்ரானிக் வாகனமும், ஒவ்வொரு ஆண்டுக்கு 125 ட்CO2e வரை GHG உமிழ்வைக் குறைக்கும்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile