• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Gravitas முதல் Safari வரை: ஜனவரி 27-இல் இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை டாடா சஃபாரி கார்..

Gravitas முதல் Safari வரை: ஜனவரி 27-இல் இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை டாடா சஃபாரி கார்..

  • Share this:
1998 முதல் இந்தியாவில் விற்பனையில் இருந்து வந்த சஃபாரி காரானது அரசியல்வாதிகள் தொடங்கி தொழிலதிபர்கள் வரையில் மிகவும் விரும்பத்தகுந்த காராக இருந்து வந்தது.  உயரமான இந்த மிட் சைஸ் எஸ்யூவி காரானது இந்திய சாலைகளுக்கு ஏற்ற காராகவும் திகழ்ந்து வந்தது.

பின்னர் 2012 முதல் 2019ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்து வந்த
மேம்பட்ட சஃபாரியான சஃபாரி ஸ்டார்ம் மாடலின் விற்பனை 2019ல்
நிறுத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக ஐகானிக் பிராண்டாக திகழ்ந்த சஃபாரியினை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.



இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில்
கிராவிட்டாஸ் என்ற 7 சீட்டர் காரை டாடா காட்சிப்படுத்தியிருந்தது.
பார்வையாளர்களை கவர்ந்த கிராவிட்டாஸ் காரானது 5 சீட்டர் ஹாரியர் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகர தோற்றம் மற்றும் பவர் என கச்சிதமான கலவையிலான கிராவிட்டாஸ் கார் 2021 ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டது. இதனிடையே
கிராவிட்டாஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்ட 7 சீட்டர் காரை வரும் 27ம் தேதியன்று புத்தம்புதிய சஃபாரியாக அறிமுகப்படுத்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாடா ஹாரியர் கார் தயாரிக்கப்பட்ட அதே OMEGARC பிளாட்ஃபார்மில் தான் புதிய சஃபாரியும் தயாரிக்கப்படுகிறது. ஹாரியரில் இருப்பதை போன்றே அம்சங்கள், இஞ்சின் ஆப்ஷன்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.


ஹாரியரில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தான் புதிய சஃபாரியிலும் இடம்பெறும். மேலும் இதிலும் மேனுவல் , ஆட்டோமேடிக் என இரண்டு கியர் ஆப்ஷன்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போன்ற 7 சீட்டர் கார்களுக்கு புதிய டாடா சஃபாரி கடும் போட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகம்மில்லை. ரூ.13.84 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரையிலான விலையில் புதிய சஃபாரி விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: