கடந்த சில மாதங்களாகவே புதிய டாடா ஸஃபாரி பெட்ரோல் மாடல் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், எப்போது சந்தையில் அறிமுகப் ஆகப்போகிறது என்பது பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதியாகக் கூறவில்லை. அது மட்டுமின்றி, அவ்வப்போது செய்திகள் மட்டும் வெளியானதே தவிர அதிகாரபூர்வமான தேதி அல்லது நேரம் பற்றிய அறிவிப்பு தாமதமாகிக் கொண்டே சென்றது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல, புதிய டாடா ஸஃபாரியின் டெஸ்ட் டிரைவ் சமீபத்தில் ரகசியமாக நடத்தப்பட்டது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.,
ஹைவேயில் நடத்தப்பட்ட புதிய டாடா ஸஃபாரியின் டெஸ்ட் டிரைவ் ரகசியமாக இர்ய்ந்தாலும், வீடியோவில் படம்படிக்கப்பட்டு, Thrust Zone என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
ரகசியமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின் படி, புதிய டாடா ஸஃபாரி அதன் தற்போதைய எஸ்யூவி போலவே டிசைனை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, புதிய டாடா ஸஃபாரி பெட்ரோலில் இயங்கும் மற்றும் இதில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யபட்ட யூனிட் உள்ளதாகவும், அது 150bhp அவுட்புட்டை டெலிவர் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய பெட்ரோல் இன்ஜினால் எஸ்யுவியில், கியர் பாக்ஸ் ஆப்ஷன், 6 ஸ்பீடுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் டார்க் கன்வர்டர் அல்லது இரட்டை கிளட்ச் யூனிட் கொண்டுள்ளது. தற்போதைய டாடா ஸஃபாரி மாடலில் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் என்ஜின் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
டாடா ஸஃபாரி டீசல் மாடலுக்கு ரூ.14.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் மாடல் விலை ரூ.23.19 லட்சம் வரை காணப்படுகிறது. இருப்பினும், இதே ஸஃபாரியின் பெட்ரோல் வெர்ஷன் சந்தைக்கு வருவதால், இதன் ஆரம்ப விலை குறைவதைக் காணலாம். ஆனாலும், இதன் விலை பற்றிய விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதிகாரபூர்வமான தகவல் வந்த பிறகு தான் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு அறிமுகம் ஆகும் என்பது தெரியும்.
ஆனால், ஏற்கனவே சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இந்த பெட்ரோல் வெர்ஷன் எஸ்யுவி இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, டாடா ஸஃபாரி மாடலுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளது. இதனால், வாகனத்தின் முன்பதிவும் இன்னும் சில மாடங்களில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | கார் வாங்க முடியாது என தோற்றத்தை வைத்து அவமதித்த ஷோரூம் பிரதிநிதி - ஒரு மணிநேரத்தில் ரூ.10 லட்சத்துடன் வந்து விவசாயி பதிலடி!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 18 ஆம் தேதியன்று சந்தையில் புதிய டார்க் எடிஷன் எஸ்யூவியை வெளியிட்டது. இந்த வெர்ஷன் ஓபரான் பிளாக் என்ற பெயிண்ட் ஸ்கீமுடன் வருகிறது. இந்த டார்க் எடிஷனில், வாகனத்தின் பெரிய வடிவமைப்பு, எந்த டிசைனும் மாறாமல் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.