Home /News /automobile /

டாடா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது!

டாடா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது!

டாடா கார்

டாடா கார்

டாட்டா நெக்ஸான் டிசம்பர் 2021'இல் மொத்த விற்பனையாக 12,899 யூனிட்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் 2021 ஆண்டில் 2,000 யூனிட் நெக்ஸான் வண்டிகளையும், டிகோர் எலெக்ட்ரிக் வண்டிகளையும் விற்றுள்ளது. மேலும் இதன் மூலம் பசுமை மற்றும் தூய்மையான மாற்றுகளுக்கு வழி வகுக்க கூடிய மின்சார வாகனங்களின் விற்பனை மிகவும் பிரபலமாகி வருகின்றன என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம், டாடா நெக்ஸான் வண்டியானது டிசம்பர் 2021-இல் இந்தியாவின் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. இது மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் வண்டிகளின் விற்பனையை மிஞ்சியுள்ளது.

உள்நாட்டு மின்சார கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், கடந்த ஆண்டில் அதன் மின்சார கார்களின் விற்பனையில் 439 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் டிசம்பரில் விற்ற 2,255 வண்டிகளை விடவும் இந்த கடந்த ஆண்டு 418 யூனிட்கள் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. அதன்படி 2,000 யூனிட்களை தாண்டியது. இது டாடா எலெக்ட்ரிக் வண்டிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கலாக உள்ளது. அந்த வகையில் நவம்பர் 2021-இல் 1,751 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தது. அதாவது 2021 டிசம்பரில் அவை 29 சதவீதம் வளர்ச்சியடைந்தன.

நெக்ஸான் மற்றும் டிகோர் மாடல் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய இரண்டு எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே தற்போது இந்திய மின்சார கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி ஒன்றாக இருந்து வருகிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் வண்டியானது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான மின்சார காராக உள்ளது. டாடா நிறுவனம் விரைவில் அல்ட்ரோஸ் எலெட்ரிக் வண்டியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இவர்களின் பிரபலமான மைக்ரோ-SUV எலக்ட்ரிக் வெர்ஷன் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் சுமார் 10,000 யூனிட்களின் விற்பனையை செய்துள்ளது மற்றும் 2021 டிசம்பரில் முதல் முறையாக 2,000 யூனிட்களை மாதாந்திர விற்பனையாக செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஷைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.

Also see... புதிய டிசைன், எஞ்சின் உடன் ரெடியாகும் அம்பாசிடர் 2.0 மாடல்.!

மேலும் டாடா நெக்ஸான் எலெட்ரிக் வண்டியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை விரைவில் பெரிய பேட்டரியுடன் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் அதன் மின்சார வாகன வணிகத்தை வளர்ப்பதற்காக, டாடா மோட்டார்ஸ் அதன் சொந்த எலக்ட்ரிக் வாகன துணை நிறுவனமான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியை நிறுவியுள்ளது. டாட்டா நிறுவனத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் ரூ.7,500 கோடி அளவு பங்கை அதன் எலெட்ரிக் வண்டிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

Also see... கண்ணைக்கவரும் டிரிம்ப் டைகர் 1200 பைக்கின் 5 மாற்றங்கள்!

மறுபுறம், டாட்டா நெக்ஸான் டிசம்பர் 2021'இல் மொத்த விற்பனையாக 12,899 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6,835 யூனிட்களாக இருந்தது. எனவே இந்த ஆண்டின் வளர்ச்சி என்பது 88.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன்படி, 2011 டிசம்பரில் டாடாவின் மொத்த விற்பனை 35,299 யூனிட்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 23,545 யூனிட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 50 சதவீத நேர்மறையான வளர்ச்சியுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையையும் தாண்டி உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: TATA

அடுத்த செய்தி